அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விஜய் பரிசு - விருந்து!
பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் பதக்கம் வழங்கி கவுரவித்தார்.
சென்னையில் உள்ள அவரது ஜேஎஸ் திருமண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடந்த இந்த விழாவில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி, சால்வை அணிவித்தார். அதோபோல தமிழ்ப் பாடத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களையும் கவுரவித்தார்.
மாவட்ட அளவில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவ மாணவிகளுக்கு தனது இயக்கத்தின் நிர்வாகிகள் இதே போல பரிசுகள் வழங்கி உதவ� ��வார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
பின்னர், வந்திருந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் விருந்தளித்த விஜய், அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஆனந்த், செயலாளர் ரவிராஜா, மக்கள் தொடர்பாளர் பிடி செல்வகுமார் உள்பட பலரும் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment