3:04 AM
0






கௌதம் மேனன் எடுக்கும் யோஹான்: அத்தியாயம் ஒன்று படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகையை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது.
விஜயை வைத்து கௌதம் மேனன் எடுக்கும் படம் யோஹான்: அத்தியாயம் ஒன்று.
இந்த பட த்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் யோஹானில் நான் நடிக்கவில்லை என்று ஸ்ருதியும், ஸ்ருதியை கேட்கவேயில்லை என்று கௌதம் மேனனும் தெரிவி்த்துவிட்டனர்.
சரி பட அறிவிப்பு வெளியாகி இத்தனை நாட்கள் ஆகியும் கதாநாயகி யார் என்றே கௌதம் கூறவில்லையே என்று பலரும் முணுமுணுத்தனர். இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக க ோலிவுட், டோலிவுட், பாலிவுட் அல்ல ஹாலிவுட்டில் இருந்து நடிகையை அழைத்து வர முயற்சி நடந்து வருகிறதாம். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை உலக அளவில் கொண்டு செல்லும் நோக்கத்தில் தான் படத்திற்கு யோஹான் என்று பெயரிட்டுள்ளாராம் இயக்குனர்.
கோலிவுட்டுக்கு ஹாலிவுட் நடிகையை அழைத்து வரும் பணியில் கௌதம் மேனன் ஈடுபட்டுள்ளாராம். ஒரு பக்கம் கமல் ஹாலிவுட்டுக் கு போகிறார். மறுபக்கம் ஹாலிவுட் நடிகை கோலிவுட்டுக்கு வரப் போகிறார். இதன் மூலம் ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் இடையேயான உறவு வலுப்பட்டு வருகிறது என்று தான் கூற வேண்டும்.







0 comments:

Post a Comment

POPULAR POSTS