பிரபுதேவாவை சந்தித்த விஜய்..!மீண்டும் போக்கிரி கூட்டணி..!
ஏற்கனவே விஜய்யை வைத்து இரண்டு படங்கள் தந்திருக்கிறார் பிரபுதேவா. போக்கிரி, வில்லு. மூன்றாவதாக இந்தக் கூட்டணி அமையுமா?
வான்டட், ரவுடி ரத்தோர் வெற்றிக்குப் பிறகு பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குனராகிவிட்டார் பிரபுதேவா.
நேற்று தனது புதிய இந்திப் படத்தை தொடங்கியுள்ளார். அவரது ஷெட்யூலைப் பார்த்தால் இன்னும் இரண்டு விருஷத்துக்கு அவர் தென்னகம் திரும்புவாரா என்று சந்தேகமாக உள்ளது.
இந்நிலையில் பிரபுதேவாவை அவரது மும்பை வீட்டில் விஜய் சந்தித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிரபுதேவாவுக்காக ரவுடி ரத்தோரில் ஒரு பாடலுக்கு ஆடினார் விஜய். பதிலுக்கு பிரபுதேவா விஜய்யை இயக்குவ� �ர் என்கிறார்கள் கோடம்பாக்கத்து யூகக்காரர்கள்.
போக்கிரி கூட்டணி மீண்டும் இணைந்தால் ஒரு ஹிட் நிச்சயம்.
0 comments:
Post a Comment