நம்பரை கொடுத்துராதீங்க... -ஸ்ரேயா கெஞ்சல்!
சமீபத்தில் சென்னைக்கு வந்த ஸ்ரேயா 'சந்திரா' படத்தின் பிரஸ்மீட்டில் கலந்துகொண்டார். நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில் ஒன்றுதான் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது அவரை.
ரஜினி சார் கூடவே நடிச்சுட்டேன். அப்புறம் யார் கூட நடிச்சா என்ன, நடிக்கலைன்னா என்ன? கதை நல்லாயிருந்தா போதும். யார் கூட வேணும்னாலும் நடிக்கலாம்.
அது புதுமுகமா இருந்தாலும் எனக்கு ஓகேதான் என்றார் கேஷுவலாக. அது போதாதா?
எருமைப் பாளயத்திலிருந்து ஏகாம்பரம் பேசுறேங்க... நம்ம கூட ஒரு படத்துல நடிக்கலாமே என்கிற ரீதியில் ஏகப்பட்ட 'அன் நோன்' கால்கள் வருகிறதாம் அவருக்கு. அடிக்கடி சென்போன் நம்பர்களை மாற்றிக் கொண்டிர ுந்தாலும், எப்படியோ மோப்பம் பிடித்து போன் அடித்துவிடுகிறார்களாம் சில புது இயக்குனர்கள்.
சமீபத்தில் தனக்கு நெருக்கமான சில புரடக்ஷன் மேனேஜர்களை தொடர்பு கொண்ட ஸ்ரேயா, 'அண்ணேய் புண்ணியமா போவும். என் நம்பரை தயவு செய்து எங்கேயும் கசிய விட்றாதீங்க' என்கிறாராம்.
கேட்கும்போதே கிறுகிறுன்னுதான் வருது...
0 comments:
Post a Comment