கார்த்தி கலந்து கொண்ட நிகழ்ச்சி தடியடி... தள்ளுமுள்ளு...
கிரிக்கெட் என்றால் ஆர்வத்தோடு அது பற்றி சிலாகிக்கும் நம்ம ஊர் ஹீரோக்களில் கார்த்தி ரொம்பவே வித்தியாசமானவர். நமது பாரம்பரிய விளையாட்டான கபடிக்கும் மரியாதை கொடுப்பவர். சில தினங்களுக்கு முன் உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற மிகப்பெரிய கபட ிப் போட்டி நிகழ்ச்சிக்கு நேரில் சென்று வீரர்களுக்கும் வீராங்கனைக்கும் பரிசளித்தார்.
கார்த்தி வருகிறார் என்றதும் அப்பகுதி மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்துவிட்டார்கள். அவரை பார்க்கும் ஆசையில் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட சிலரால் கேலரி சரிந்து ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் வேறு! இதனால் ஒரு நிமிடம் திகைத்துப் போன கார்த்தி, 'எல்லாரும் அம� ��தியா இருங்க. நானே உங்க இடத்துக்கு வர்றேன்' என்று கூறிவிட்டு அந்த கேலரியை சுற்றி ஒரு ரவுண்ட் அடித்தார்.
இவ்வளவு ஸ்போர்ட்டிவாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கும் ஒரு சின்ன அதிர்ச்சி. கார்த்திக்காக போடப்பட்டிருந்த இருக்கையின் இருபுறத்திலும் தி.மு.க வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவர் அமர்ந்திருக்க, அவர்களிடம் பேசினாலும் சிக்கல். பேசாவிட்டாலும் சி� �்கல். தேவையில்லாமல் அரசியல் சாயம் பூசப்படுமே என்று அஞ்ச ஆரம்பித்துவிட்டார் அவர்.
இவர்கள் இல்லையென்றால் அதிக நேரம் இருந்திருப்பாரோ என்னவோ? சட்டென்று கிளம்பி, விர்றென பறந்தேவிட்டார்.
0 comments:
Post a Comment