11:23 PM
0






மாற்றான் படத்தில் இரு வேடங்களில் கன்ஜாய்ண்ட் ட்வின்ஸாக நடித்திருக்கும் சூர்யா மொத்தம் 2500 காட்சிகள் நடித்திருக்கிறார்.

ஒவ்வொரு காட்சியிலும் இரு கதாபாத்திரங்களுக்காக இரண்டு முறை நடிக்க வேண்டும்.
அதிலும் சரியாக வராத காட ்சிக்காக ரீடேக் எடுக்கவேண்டும் என படத்தில் மொத்தம் 2500 காட்சிகள் சூர்யாவின் பங்கு.

சூர்யாவின் கடின உழைப்பை வீணாக்கக் கூடாது என்ற முடிவில் படத்தின் எடிட்டிங்கில் கவனத்துடன் இருக்கிறது மாற்றான் டெக்னீஷியன் யூனிட். மாற்றானுக்குப் பிறகு சிங்கம் -2 படத்தில் சூர்யா நடிக்கிறார் என்றிருந்த நிலையில், சூர்யாவின் அடுத்த படம் ஹாலிவுட் படமாக இருக்கலாம் என பரபரக்கிறது க� ��டம்பாக்கம்.

ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பார்ன் தயாரிப்பில் நடிகர் கமலஹாஸன் இயக்கவிருக்கும் ஹாலிவுட் படத்தில் சூர்யாவை நடிக்கவைக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம் கமலஹாஸன். திரைத்துறையில் கமலஹாஸனுக்கும் சூர்யாவிற்கும் இடையே நல்ல புரிதல் இருப்பது அனைவருக்கும் தெரியும்.

சூர்யாவின் கடின உழைப்பை வாழ்த்தி சூர்யாவிற்கு உடற்பயிற்சி கருவிகளை கமல் பரிசளித� �தது, சூர்யாவின் நடிப்பை பாராட்டும் முதல் ஆளாக கமல் இருப்பதுமே அதற்கு சான்று. மாற்றான் படத்தின் இசைவெளியீட்டு விழா ஆகஸ்டு 9-ஆம் தேதி சிங்கப்பூரில் நடக்கவிருக்கிறது.





0 comments:

Post a Comment

POPULAR POSTS