தென்னிந்திய நாயகிகளை பாடாய்ப்படுத்தும் பாலிவுட் மோகம் .
வட இந்திய நடிகைகளின் ஆட்சி தென்னிந்திய திரையுலகில் நடக்கையில் இங்கிருந்து பாலிவுட்டுக்கு சென்றவர்களின் நிலையை சற்று அலசிப் பார்ப்போம்.
கோலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த அசின் சூர்யாவுடன் இணைந்து நடித்த க ஜினி இந்திக்கு போனது.
இந்தியில் சூர்யாவுக்கு பதில் ஆமீர் கானை நடிக்க வைத்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நாயகியாக அசினையே மீண்டும் தேர்வு செய்தார். அந்த படம் சூப்பர்டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அசினுக்கு கோலிவுட் கசந்து பாலிவுட் இனித்தது.
இதையடுத்து சல்மான் கானுடன் சேர்ந்து அவர் நடித்த லண்டன் ட்ரீம்ஸ் ஓரளவுக்கு ஓடியது. மீண்டும் அவருடன் சேர்ந்து நடித� ��த ரெடி சூப்பர் ஹிட்டானது. அண்மையில் வெளிவந்த ஹவுஸ்புல் 2வும் ஹிட்டானது.
இத்தனை ஹிட் கொடுத்தாலும் அசினைக் கொண்டாட அங்கே ஆளில்லை. நான் ஹிட் நடிகை என்று பாவம் அவரே சொல்லிக் கொண்டு திரிகிறார். அவரைக் கண்டால் பாலிவுட் நடிகைகளுக்கு ஏதோ காமெடி பீஸைப் பார்ப்பது போன்று உள்ளது என்று முன்பு செய்தி வெளியாகி இருந்தது. இந்த விஷயம் அவருக்கு தெரியுமோ என்னமோ?
ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன் முதன் முதலாக இந்தியில் இம்ரான் கானுடன் சேர்ந்து லக் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் தான் அவர் நடிகையாக ஆனார். ஆனால் லக் அவருக்கு கைகொடுக்கவில்லை.
இதையடுத்து பொட்டியைக் கட்டிக் கொண்டு தமிழுக்கு வந்த அவர் சூர்யாவுடன் நடித்த ஏழாம் அறிவு ஹிட்டானது. இதற்கிடையே தெலுங்குப் பக்கம் போன அவரின் படங்கள் ஓடாமல் இருந்தன. அப்போது தான் கப்பார் சிங் வெளியாகி கண்டமேனிக்கு ஓடியுது. இதையடுத்து ஸ்ருதிக்கு தெலுங்கிலும் கிராக்கி அதிகரித்தது.
தனுஷுடன் 3 படத்தில் நடித்து முடித்ததோடு மூட்டையைக் கட்டிக் கொண்டு மும்பைக்கு போய்விட்டார். அவரையும் பாலிவுட் மோகம் விடவில்லை. இந்தி படங்களில் வாய்ப்பு தேடுகிறார்.
காஜல் அகர்வால்
ஆந்திரா பக்கம் போய் தெலுங்கு நடிகர்களிடம் காஜல் பெயரைச் சொன்னால் சமத்துப் பொண ்ணு என்பார்கள். ஹீரோ லேட்டா வந்தாலும் கூட எத்தனை மணிநேரமானாலும் காத்திருந்து நடித்துக் கொடுப்பவர்.
தெலுங்கில் பெரிய நடிகையான காஜல் தற்போது தமிழில் விஜய், சூர்யா, கார்த்தியுடன் நடிக்கிறார். இதற்கிடையே சிங்கம் படத்தின் இந்தி ரீமேக்கில் கஜோல் கணவர் அஜய் தேவ்கனுடன் நடித்தார். படம் என்னமோ ஹிட் தான். ஆனால் காஜலைத் தான் திரும்பிப் பார்ப்பார் யாருமில்லை.
வாய்ப் பு கொடுக்கவும் யாரும் வரவில்லை. இதையடுத்து அவர் மும்பையில் நடக்கும் பேஷன் ஷோக்களில் தவறாமல் கலந்து கொள்கிறார். அப்படியாவது யாராவது பாலிவுட் இயக்குனர் வாய்ப்பு தர மாட்டாரா என்ற நப்பாசை தான்.
இலியானா
இவர் கதை பெரும் கதை. ஆனால் அதை சுருக்கமாக சொல்கிறோம். தெலுங்கில் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கி கொடி கட்டிப் பறக்கும் இலியானாவையும் பாலிவுட் மோகம் வி்ட்டு வை க்கவில்லை.
அவரும் நல்ல நாள் நேரம் பார்த்து மும்பைக்கு போனார். பர்பி என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தின் நாயகன் ரன்பிர் கபூர். ஆனால் படத்தில் பாலிவுட் ராணி பிரியங்கா சோப்ராவும் உள்ளார். அப்பொழுது யாருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். இநத படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது. ஆனால் இந்த படம் இ ந்தா அந்தா என்று இழுத்துக் கொண்டே போனது. இலியானாவின் முதல் இந்தி படத்தை சீக்கிரம் வெளிவர விடாமல் பிரியங்கா தான் இழுத்தடிக்கிறார் என்று பேச்சு அடிபட்டது.
இதற்கிடையே பிரியங்காவுக்கும், இலிக்கும் ஏழாம் பொருத்தமாகிவிட்டது. ஆனால் நாங்கள் எல்லாம் தோழிகளாக்கும் என்று ஒரு போட்டோவை எடுத்து வெளியிட்டார்கள். போட்டோவைப் பார்த்து மக்கள் ஏமாந்துவிடுவார்களா என்ன. இத்த� ��ையும் தாண்டி ஒரு வகையாக பர்பி வரும் செப்டம்பர் மாதம் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு தான் இலியானாவின் பாலிவுட் பயணம் தொடருமா, புஸ்ஸாகுமா என்று தெரியும்.
த்ரிஷா
பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கும் த்ரிஷாவுக்கும் பாலிவுட் பக்கம் போக வேண்டும் என்ற ஆசை வந்தது. இதையடுத்து பிரியதர்ஷனின் கட்டா மீட்டா என்ற படத்தில் அக்ஷய் குமாருடன் நடித்தார். அந்� � படம் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை.
அந்த படத்தைப் பார்த்த இந்தி ரசிகர்கள் த்ரிஷாவைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்று தெரியாது. ஆனால் தமிழ் ரசிகர்களோ இந்த உப்பு சப்பில்லாத கதாபாத்திரத்தில் நடிக்கத் தான் பாலிவுட் போனாருக்கம் என்றார்கள். அந்த படத்திற்குப் பிறகு வேறு ஏதாவது இந்திப் படத்தில் வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்த்த அவருக்கு மிஞ்சியது ஏமாற்றமே. � ��ண்மையில் மூத்த நடிகரான சஞ்சய் தத்துடன் நடிக்க அழைத்தார்கள்.
ஆனால் கால்ஷீட் பிரச்சனையை காரணம் காட்டி அந்த வாய்ப்பை தட்டிக்கழித்தார். உண்மையிலேயே கால்ஷீட் பிரச்சனை தான் காரணமா?
0 comments:
Post a Comment