மந்தவெளியில் புதுமுகம் அவர் தான் அஜீத் "
திரையுலகில் பெரும் பின்புலம் இல்லாமல், தன் முயற்சியால் முன்னுக்கு வந்தவர் அஜீத். இன்று அஜீத் திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் முடிகிறது.
பல்வேறு ஏற்ற, இறங்கங்களைச் சந்தித்தாலும் எதற்கும் பதற்றப்படாமல் தான் சரி என நினைப்பதைச் செய்வதே அஜீத்தின் பலம். அவரது இந்த குணமே அவருக்கு பல ரசிகர்களை கொண்டு வந்து சேர்த்தது.
தன் பெயரைச் சொல்லி யாரும் தன் ரசிகர்களை தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாது என முடிவு செய்த அஜீத், தன் ரசிகர் மன்றங்களை கலைக்கிறேன் என்று அறிவித்த பின்னர் தான் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது.
இன்று 21வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் அஜீத்� �ை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வாவை தொடர்பு கொண்டு பேசிய போது " அமராவதி படத்தின் கதையினை தயார் செய்த உடன், ஒரு நாள் எஸ்.பி.பியை சந்திக்கும் போது கதையினை கூறினேன். "இக்கதைக்கு புதுமுக நாயகன், நாயகி இருந்தால் நன்றாக இருக்கும்.. உங்களுக்கு தெரிந்த யாராவது இருந்தால் சொல்லுங்கள்" என்றேன்.
உடனே எஸ்.பி.பி " தெலுங்கில் பிரேம புஸ்தகம் என்ற படத்தில� �� நாயகனாக புதுமுகம் ஒரு பையன் நடித்து இருக்கிறான். அவனது முகம் அனைவரையும் வசீகரிக்கும் முகம். ஆனால் ஆள் ஒல்லியாக இருப்பான்.. வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள்" என்றார்.
உடனே நான் 'பிரேம புஸ்தகம்' படக்குழுவினை தொடர்பு கொண்டேன். அவர்கள் எனக்கு கூறிய செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் சென்னை மந்தவெளியில் இருக்கிறார் என்று கூறினார்கள்.
நான் உடனே சென� �று அவரைச் சந்தித்தேன், கதைக்கு பொருத்தமாக இருந்தார். உடனே ஒப்பந்தம் செய்தேன். அவர் தான் அஜீத் " என்று கூறினார்.
20 வருடங்கள் திரையுலகில் தொடர்ந்து முன்னணியில் இயங்கி வருவதே சாதனை தான். திரையுலகில் தன் பயணத்தைத் தொடரும் அஜீத்திற்கு வாழ்த்துகள்! வரும் வருடங்களில் பல்வேறு சாதனைகளை புரிய வாழ்த்துவோம்!
.
0 comments:
Post a Comment