1:13 AM
0


86 பேருக்கு அனுஷ்கா மது விருந்து கொடுத்தார்: இந்து மக்கள் கட்சி கண்டனம் 86 பேருக்கு அனுஷ்கா மது விருந்து கொடுத்தார்: இந்து மக்கள் கட்சி கண்டனம் 86 பேருக்கு அனுஷ்கா மது விருந்து கொடுத்தார்: இந்து மக்கள் கட்சி கண்டனம்

நடிகை அனுஷ்கா 'இரண்டாம் உலகம்' படக்குழுவினர் 80 பேருக்கு மது விருந்து அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஜார்ஜியாவில் இந்த விருந்து நடந்துள்ளது.

'இரண்டாம் உலகம்' படத்தில் ஆர்யா நாயகனாகவும் அனுஷ்கா நாயகியாகவும் நடிக்கின்றனர். செல்வராகவன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பல மாதங்களாக விறுவிறுப்பாக நடந்தது. இறுதியாக ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

படப்பிடிப்பு கடைசி நாளில் அனுஷ்கா தன் சொந்த செலவில் இந்த விருந்தை நடத்தினார். ஜார்ஜியாவில் உள்ள ஒயின் வகைகள் பிரபலமானவையாகும். 80 பேருக்கும் பெட்டி பெட்டியாக ஒயினை வரவழைத்து குடிக்க வைத்தார். இதனை இந்து மக்கள் கட்சி கண்டித்துள்ளது.

அதன் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனுஷ்கா 80 பேருக்கு மது விருந்து அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. படக்குழுவினருக்கும் வேறு ஏதேனும் பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்து இருக்கலாம். மது விருந்து என்பது பண்பாட்டுக்கு விரோதமானது.

இதன் மூலம் அன்னிய கலாச்சாரத்தோடு ஒன்றி இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அனுஷ்கா யோகா ஆசிரியை என்கின்றனர். யோகாவில் இதைத்தான் கற்றாரா? என்று புரியவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.

0 comments:

Post a Comment

POPULAR POSTS