3:57 AM
0
லண்டன் விழாவில் நடிகை ஹேமமாலினிக்கு சர்வதேச விருது லண்டன் விழாவில் நடிகை ஹேமமாலினிக்கு சர்வதேச விருது
லண்டன் விழாவில் நடிகை ஹேமமாலினிக்கு சர்வதேச விருது

லண்டன், செப். 17-

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 12-வது ஆசிய சாதனையாளர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், பாரதீய ஜனதா எம்.பி.யும் நடிகையுமான ஹேம மாலினிக்கு சர்வதேச ஆளுமை (பெர்சனாலிடி) விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சனிக்கிழமை இரவு அங்குள்ள கிராஸ்வெனார் ஹவுஸ் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில், இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த விருது கிடைத்தது பற்றி ஹேமமாலினி கூறியதாவது:-

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் ஏசியன் வாய்ஸ் மற்றும் குஜராத் சமாச்சார் ஆகியோர் ஆவர். அரவிந்தர் சொசைட்டியின் கனவு திட்டங்களை சர்வாண் அறக்கட்டளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அந்த அறக்கட்டளையில் நானும் ஒரு அங்கத்தினர் என்ற வகையில் என்னை தேர்வு செய்துள்ளனர்.

இந்தியா மிகப்பெரிய தேசமாகும். குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நாடு பெற்றுள்ள போதும், ஒரு பக்கம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களும் நிறையப்பேர் இருக்கின்றனர். வறுமை நிலையை ஒழிக்க, சர்வாண் அறக்கட்டளை பல்வேறு திட்டங்களின் கீழ், கிராமங்களில் ஏராளமான சக வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆயுர்வேத சிகிச்சையின் முன்னோடியான ஷானாஸ் உசேனுக்கு சிறந்த பெண் மணிக்கான விருது கிடைத்தது.

0 comments:

Post a Comment

POPULAR POSTS