10:13 PM
0
தமிழகத்தில் வசூல் குவிக்கும் பிறமொழி படங்கள்: சல்மான்கான், அக்ஷய்குமார் வித்யாபாலன் படங்கள் சாதனை தமிழகத்தில் வசூல் குவிக்கும் பிறமொழி படங்கள்: சல்மான்கான், அக்ஷய்குமார் வித்யாபாலன் படங்கள் சாதனை
தமிழகத்தில் வசூல் குவிக்கும் பிறமொழி படங்கள்: சல்மான்கான், அக்ஷய்குமார் வித்யாபாலன் படங்கள் சாதனை

தமிழகத்தில் சமீபகாலமாக இந்தி, தெலுங்கு, மலையாள மொழி படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் குவிக்கின்றன. சில படங்கள் தமிழ் படங்களை மிஞ்சி லாபம் ஈட்டுகிறது. முன்பெல்லாம் நகர பகுதிகளில்தான் இவை ஓடும். ஆனால் இப்போது புறநகர் பகுதிகளிலும் நன்றாக ஓடுகிறது.

சல்மான்கான் நடித்த 'ஏக்தா டைகர்' இந்திப்படம் தமிழகத்தில் ரூ.1.25 கோடி லாபம் ஈட்டியுள்ளது. அக்ஷய்குமாரின் 'ரவுடி ரத்தோர்' படம் ரூ.65 லட்சமும், வித்யாபாலன் நடித்த 'த டர்டி பிக்சர்' படம் ரூ.80 லட்சமும் லாபம் பார்த்துள்ளது. 'ராஸ் 3டி' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலிக்கும் லாபம் ரூ.1 கோடியை தாண்டும் என்கின்றனர். ரன்பீர் கபூரின் 'பர்பி' படம் தமிழகத்தில் 24 தியேட்� �ர்களில் திரையிட்டு இரு நாட்களில் ரூ.34.5 லட்சம் வசூலித்துள்ளது.

தெலுங்கு படங்களும் தமிழகத்தில் கலக்குகின்றன. மகேஷ்பாபுவின் 'தூக்குடு' படம் ஏற்கனவே ரூ.66 லட்சம் லாபம் ஈட்டியது. கோடையில் ரிலீசான பவன் கல்யாணின் 'கப்பார்சிங்' படம் ரூ.55 லட்சம் லாபம் சம்பாதித்தது.

செங்கல்பட்டு, கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல், திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் பிறமொழி படங்களுக்கு வரவேற்பு பெருகியுள்ளது. வட இந்தியர்கள் இப்பகுதிகளில் குடியேறி இருப்பது, மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் கட்டப்பட்டு இருப்பதுமே இதற்கு காரணம் என்கின்றனர்.

தமிழ், தெலுங்கில் ரிலீசான 'நான் ஈ' படம் 50 நாட்களில் ரூ.24 1/2 கோடி வசூலில் சாதனை படைத்துள்ளது. கரீனா கபூரின் 'ஹீரோயின்' இந்திப்படம் தமிழகமெங்கும் ரிலீசாக உள்ளது. பழைய நடிகை ஸ்ரீதேவியின் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படமும் தமிழில் ரிலீசாக உள்ளது.

0 comments:

Post a Comment

POPULAR POSTS