10:35 AM
0


ஐடைம்ஸ் 2011 கருத்துக் கணிப்பில், அந்த ஆண்டின் ரசிகர்களின் அதிக விருப்பத்துக்குரிய பெண்ணாக கரீனா கபூர் தேர்வாகியுள்ளார். முன்னாள் கனவுக் கன்னியான ஐஸ்வர்யா ராய் 10வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

ஐடைம்ஸ் 2011ம் ஆண்டின் அதிக விருப்பத்துக்குரிய பெண் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கரீனா

கபூர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2வது இடம் காத்ரீனா கைபுக்குக் கிடைத்துள்ளது. 3வது இடத்தைப் பிடித்துள்ளார் தீபிகா படுகோன்.

4வது இடத்தில் பிரியங்கா சோப்ராவும், 5வது இடத்தில் அனுஷ்கா சோப்ராவும் உள்ளனர்.

தி டர்ட்டி பிக்சர்ஸ் மூலம் லைம்லைட் எகிறிப் போய்க் காணப்படும் வித்யா பாலன் 6வது இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் சிங்கள நடிகை ஜாக்குலின் இருக்கிறார்.

நர்கீஸ் பக்ரி 8வது இடத்திலும், கங்கனா ரனவத் 9வது இடத்திலும் காணப்படுகின்றனர்.

முன்னாள் கனவுக் கன்னியான ஐஸ்வர்யா ராய்க்கு 10வது இடமே கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் தனது கண் அழகாலும், வசீகரத்தாலும் ரசிகர்களை வாரிக் குவித்து வைத்திருந்த ஐஸ்வர்யா ராய் தற்போது பின்னுக்குப் போய் விட்டார்.

ஸ்ருதி ஹாசனுக்கு இந்தப் பட்டியலில் 15வது இடமும், ஆசினுக்கு 17வது இடமும் கிடைத்துள்ளன.

திரிஷாவை 19வது இடத்திலும் இலியானாவை 20வது இடத்திலும் ரசிகர்கள் வைத்துள்ளனர். சமீரா ரெட்டி 29வது இடத்தில் இருக்கிறார்.


http://tamil-sexygirls.blogspot.com



  • http://tamil-sexygirls.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    POPULAR POSTS