10:29 AM
0



இந்தியில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டான "தி டர்ட்டி பிக்சர்ஸ்" படம் தமிழிலும் ரீ-மேக்காக இருக்கிறது. இதில் சில்க் வேடமான வித்யாபாலன் வேடத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல் வெள ியாகியுள்ளது. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் எடுக்கப்பட்ட படம் "தி டர்ட்டி பிக்சர்ஸ்". இதில் சில்க்காக பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடித்து இருந்தார். ஆரம்பத்தில் இந்தபடத்தில் நடிப்பதற்கு சில்க் ஸ்மிதாவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் படத்தில் வித்யாபாலன் ரொம்ப ஆபாசமாக நடித்திருப்பதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இப்படத்த ிற்கு தடை விதிக்க கோரி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இருந்தும் எல்லா எதிர்ப்பையும் மீறி வித்யாபாலனின் "தி டர்ட்டி பிக்சர்ஸ்" படம் ரிலீஸாகி அவருக்கு தேசிய விருதை பெற்று தந்‌தது. படமும் வசூலிலும்
சாதனை படைத்தது.

இந்நிலையில், இந்தியில் டர்ட்டி பிக்சர்ஸ் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, அப்படத்தின் இயக்குநர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் இப்படத்தை ரீ-மேக் செய்ய முடிவெடுத்துள்ளார். இதில் சில்க் வேடத்தில் நடிகை அனுஷ்காவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழியிலும் அனுஷ்கா ரொம்ப பாப்புலர் என்பதாலும், ஏற்கனவே வானம் படத்தில் அனுஷ்கா விலைமாது கேரக்டரில் அசத்திய காரணத்தினாலும் அவரை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.


http://meena-tamilsexstory.blogspot.com

0 comments:

Post a Comment

POPULAR POSTS