1:52 AM
0


விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல... விஜய்யே கூட இந்த அதிர்ச்சியை எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். ஒரு சின்ன படம், தடாலடியாக தனது பெரிய பட்ஜெட் படத்தைத் தடுத்துவிடும் என்பதை!
தலைப்பில் இருந்த ஒற்றுமை மட்டுமல்ல... அந்த தலைப்ப ின் டிசைன் கூட ஈயடிச்சான் காப்பி மாதிரி ஆகிவிட்டதுதான் இந்த தடைக்கு முக்கிய காரணம்.
கள்ளத்துப்பாக்கியின் கதை...

3 ஆண்டுகளுக்கு முன்பே கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பை பதிவு செய்து படப்பிடிப்பையும் தொடங்கியவர் சி ரவிதேவன் மற்றும் முருகேசன். இந்தப் படத்தை இயக்குபவர் லோகியாஸ்.
நடிகர் கமல் ஹாஸனிடம் உதவியாளராக இருந்தவர்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரவிதேவன்.
படத்தையே, பத்மஸ்ரீ கமல்ஹாஸன் ஆசீர்வாதத்துடன்' என்றுதான் ஆரம்பித்தார். கமல் அட்வைஸ்படி ஒத்திகையெல்லாம் பார்த்துதான் படப்பிடிப்பைத் தொடங்கினாராம்.
படம் குறித்த விளம்பரங்கள், செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன கடந்த இரு ஆண்டுகளாக. இந்தத் தலைப்பை 2009-லேயே அவர்கள் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதனைப் புதுப்பித்து வந்த ுள்ளனர்.
இந்த நிலையில், நண்பன் படத்துக்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு துப்பாக்கி என்று தலைப்பிட்டனர். இந்தத் தலைப்பை இந்த ஆண்டுதான் விஜய் மற்றும் முருகதாஸ் முடிவு செய்து அறிவித்தனர்.
இந்த செய்தி வெளியானதுமே தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தனர் ரவிதேவனும் அவரது குழுவினரும். ஆனால் அப்போது சங்கத்தில் பொறுப்பில் இருந்த எஸ் ஏ சந்திரசேகரனும் துப்பாக்கி தயாரிப்பாளர் தாணுவும் இந்தப் புகாரை கண்டுகொள்ளவில்லையாம்.
அதன் பிறகு தங்களின் நலம் விரும்பிகளிடம் விஷயத்தைச் சொல்லி, அவர்கள் அறிவுரைப்படிதான் வழக்குப் போட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து கள்ளத்துப்பாக்கி தயாரிப்பாளர் ரவிதேவன் நம்மிடம் கூறுகையில், "நாங்கள் ஆரம்பத்திலிருந்தே துப்பாக்கி படத் தலைப்புக்கு எதிர்ப்பு காட்டி வந்� �ோம். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. இவர்களால் என்ன செய்ய முடியும் என்ற அலட்சியம் அவர்களுக்கு.

நாங்க ஒட்டின போஸ்டர்கள் மீதே அவர்கள் துப்பாக்கி போஸ்டரையெல்லாம் ஒட்டி இம்சை குடுத்தாங்க. எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தார்கள்.
அதன் பிறகுதான் சட்டத்தின் துணையை நாடினோம். இரண்டு தலைப்புகள், அதன் டிசைன்களைப் பார்த்த நீதிபதி எங்கள் பக்கம் நியாயமிரு� ��்ததை ஒப்புக் கொண்டு தடை விதித்துள்ளார். எங்கள் படம் காப்பாற்றப்பட்டுள்ளது," என்றார்.
அதுமட்டுமா... எவ்ளோ பெரிய பப்ளிசிட்டி.. படத்துல சரக்கு கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்தா நல்ல வியாபாரம்தான்!

0 comments:

Post a Comment

POPULAR POSTS