மெலிந்து போன பூசணி ஹன்சி..!சிம்பு கிண்டல் ..!
மும்பை அழகியான ஹன்சிகா மோத்வானிக்கு தமிழ் தெரியாது. அவரை, `வாலு' படப்பிடிப்பு குழுவினர் செல்ல மாக, ``குண்டு பூசணிக்காய்'' என்று கிண்டல் செய்து வந்தார்கள். அதன் அர்த்தம் புரியாமல், மற்றவர்களுடன் சேர்ந்து ஹன்சிகாவும் சி ரித்து வந்தார்.
ஒரு கட்டத்தில், ``குண்டு பூசணிக்காய்'' என்பதன் அர்த்தம் புரிந்து கொண்டதும், ``நான் மெலிந்து காட்டு கிறேன், பாருங்கள்'' என்று படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் ஹன்சிகா சவால் விட்டார். அவர் சொன்னது போலவே ஒரே மாதத்தில், 6 கிலோ மெலிந்து விட்டார்!
``இப்ப சொல்லுங்க, நான் குண்டு பூசணிக்காயா?'' என்று ஹன்சிகா கேட்டதும், ``மெலிந்து போன பூசணிக்காய்'' என் று படத்தின் கதாநாயகன் சிலம்பரசன் சிரித்தபடி, கிண்டல் செய்தார்!
0 comments:
Post a Comment