திரையுலகில் கதாநாயகர்களுக்கே முக்கியத்துவம்: அசின் வருத்தம்
அசின் நடித்த கஜினி, ரெடி, ஹவுஸ்புல் ஆகிய இந்திப்படங்கள் ரூ.100 கோடி வசூல் ஈட்டியுள்ளன. இதனால் ஹிட் படங்கள் நாயகி பட்டியலில் இடம் பிடித்துள்ளார். விரைவில் ரிலீசாக உள்ள போல்பச்சன் படத்த� ��க்கும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.
இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அசின். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
எனது படங்கள் ஹிட்டாவதற்கு அதிர்ஷ்டம்தான் காரணம். வெற்றிக்கு நான் மட்டும் காரணம் அல்ல. படத்தில் பணியாற்றிய அனைவருக்குமே அதில் பங்கு உண்டு. என்னால்தான் படங்கள் ரூ.100 கோடி வசூல் ஈட்டின என்று சொல்ல முடியாது. அது மாதிரி கர்வப்படவும் மாட்டேன்.
� ��ினிமாவில் கதாநாயகர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. அவர்களை முன்னிலை படுத்திதான் கதைகளையும் உருவாக்குகிறார்கள். இது வருத்தம் அளிக்கிறது. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் வர வேண்டும். கஹானி போல் நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் நிறைய வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். ஏற்கனவே ந டித்த ஒரே மாதிரியான கேரக்டர் உள்ள கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க மறுத்துவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment