11:19 PM
0


மும்பையைச் சேர்ந்த சினிமா இதழான பிலிம்பேர் ஆண்டுதோறும் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களுக்கு விருது வழங்கி வருகிறது.


2011-ம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுகள் நேற்று இரவு சென்னை நேரு ஸ்டேடியத்த� �ல் நடந்த விழாவில் அறிவிக்கப்பட்டது.
தமிழில் சிறந்த நடிகராக தனுஷ் (படம்: ஆடுகளம்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு நடிகை தீபிகா படுகோன் விருது வழங்கினார்.

தமிழில் சிறந்த நடிகைக்கான விருதை அஞ்சலி (படம்: எங்கேயும் எப்போதும்) பெற்றார்.

மற்ற விருதுகள் விவரம் வருமாறு:-

சிறந்த படம்: ஆடுகளம்.

சிறந்த இயக்குனர்: வெற்றிமாறன் (ஆடுகளம்).

சிறந்த து ணை நடிகர்: அஜ்மல் (கோ).

சிறந்த துணை நடிகை: அனன்யா (எங்கேயும் எப்போதும்).

சிறந்த இசை அமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் (ஆடுகளம்).

சிறந்த பாடகர்: ஆலப்ராஜு (கோ படத்தில் என்னமோ ஏதோ பாடல்).

சிறந்த பாடகி: சின்மயி (வாகை சூடவா படத்தில் சரசர பாடல்).

சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து (சரசர பாடல்).

சிறந்த புதுமுக நடிகைக்கான விருது ஸ்ருதி ஹாசனுக்கு வழங்கப்பட்டது. அவரது தந்தை � ��டிகர் கமலஹாசன் விருது வழங்கி மகளை விழா மேடையில் வாழ்த்தினார்.


விருது வழங்கும் விழாவில் நடிகர்கள் கமலஹாசன், கார்த்தி, விக்ரம், நடிகைகள் குஷ்பு, திரிஷா, ரம்யா, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரிச்சா கங்கோபாத்யாய், பூர்ணா ஆகியோரது நடன நிகழ்ச்சிகளும் நடந்தது
.

0 comments:

Post a Comment

POPULAR POSTS