9:31 PM
0



கௌதம் மேனன் விஜயை வைத்து எடுக்கும் யோஹான்: அத்தியாயம் ஒன்று படத்தில் ஸ்ருதி ஹாசனை நாயகியாக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கௌதம் மேனன் விஜய் இணையும் படம் யோஹான்: அத்தியாயம் ஒன்று.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கமல் மகள் ஸ்ர ுதி ஹாசனை நடிக்க வைக்க அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது.
இந்தி படங்களில் கவனம் செலுத்த மும்பையில் குடியேறியுள்ள ஸ்ருதியை கௌதம் மேனன் தமிழகத்திற்கு அழைத்து வர முயற்சி செய்து வருகிறார். விஜய் ஏ.ஆர். முருகதாஸின் துப்பாக்கி படத்தில் பிசியாக இருக்கிறார். அந்த படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆகும் என� �று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போன்று கௌதம் மேனன் ஜீவா, சமந்தாவை வைத்து நீ தானே என் பொன் வசந்தம் படத்தை எடுத்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் முடிந்த பிறகு ஆகஸ்ட் மாதத்தில் யோஹான் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.
.

0 comments:

Post a Comment

POPULAR POSTS