தாவணி போட்ட தேவயானி உற்சாகத்துக்கு ரெடி...
எப்படியோ போராடி தனது கணவரை ஹீரோவாக்கிவிட்டார் தேவயானி. 'திருமதிதமிழ்' படத்தின் மூலம் ராஜகுமாரன் ஹீரோவாகிறார்.
நான் கதாநாயகன் இல்லைங்க, கதையின் நாயகன் என்கிற வழக்கமான ஃபார்முலாவை இவர் அவிழ்த்துவிட்டாலும் ஃபைட், டூயட் என்� ��ு ராஜகுமாரனின் சகலவிதமான 'அச்சுறுத்தல்களும்' இருக்கிறதாம் படத்தில். ஆச்சர்யம் என்னவென்றால் தாவணி அணிந்து கொண்டு சில காட்சிகளில் ஆடவும் செய்திருக்கிறாராம் தேவயானி.
எத்தனை முறை சறுக்கினாலும் உற்சாகத்தோடு நிமிர்ந்து நிற்கும் தேவயானியின் உழைப்புக்காகவும் தன்னம்பிக்கைக்காகவும் இந்த படத்திற்கு கைகொடுக்க முன் வந்திருக்கிறார்கள் விநியோக� �்தர்கள். திருமதி ராஜகுமாரனுக்கு தமிழ்நாடு கைகொடுத்ததை போல தமிழும் கைகொடுக்கட்டும்...
.
0 comments:
Post a Comment