5:51 AM
0



விக்ரம் நடிக்கும் முதல் சரித்திரப் படம் என்ற விளம்பரங்களுடன் வந்த கரிகாலன் படத்தில் ஏகப்பட்ட குளறுபடி. இனி அந்தப் படம் வருமா என்ற கேள்விக்குறியுடன் நிற்கிறது.

விக்ரம், ஷரின் கான், அஞ்சலி நடிப்பில் கண்ணன் இயக்கத்தில் தயாராக இருந்த 'கர� ��காலன்' படத்தினை 'சில்வர் லைன் பிலிம் பேக்டரி' நிறுவனம் தயாரித்தது.
இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 40 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. அப்படப்பிடிப்பில் டிரெய்லர் மற்றும் போட்டோ ஷுட் மட்டுமே எடுத்தார்களாம். படத்திற்காக என்று இதுவரை ஒரு காட்சி கூட எடுக்கவில்லையாம்.

இதனால் இயக்குனர் கண்ணன் நீக்கப்பட்டு, காந்தி கிருஷ்ணா இயக்குனராக ஒப்பந்த� �ானார். ஆனால், இப்போது படமே இல்லை என்றாகிவிட்டது.

விக்ரம் தனது அடுத்தடுத்த படப்பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். 'தாண்டவம்' படத்தினை முடித்து இருக்கும் விக்ரம், தற்போது ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்திற்காக தேதிகள் ஒதுக்கி கொடுத்து இருக்கிறார்.

விக்ரம் கால்ஷீட் தேதிகள் ஒதுக்கினால் மட்டுமே 'கரிகாலன்' படத்தை துவக்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டு இருக்கிற� �ு.

இன்னொரு பக்கம், இந்தப் படத்தில் தனக்கு ஜோடியாக நயன்தாராதான் நடிக்க வேண்டும் என்று கண்டிஷன் வேறு போட்டுள்ளாராம் விக்ரம். நயனோ கால்ஷீட் இல்லை என கைவிரிக்க, கரிகாலன் நிலைமை வடிவேலு போட்ட கிரிகாலன் வேடம் மாதிரி ஆகிவிட்டது.
.
.

0 comments:

Post a Comment

POPULAR POSTS