7:27 AM
0



கிராமியக் கதைகளில் நடிக்க ஆசைப்படுவதாகக் கூறுகிறார் அஜித்குமார்.

நடிகர் அஜித்தின் படங்கள் பெரும்பாலும் நகரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டவையாகத் தான் இருக்கும். மேலும் அவரது படம் முழுக்க சண்டைக்காட்சிகள், நகர நெரிசல் என்று காட்ச� �ப்படுத்தியிருப்பார்கள்.


இப்படி நடிப்பதற்கு அலுத்து விட்டதோ என்னவோ, கிராமியக்கதைகளில் நடிக்க ஆசைப்படுவதாக தனது நண்பர்களிடம் கூறியிருக்கிறார் அஜித். அதாவது குத்துப்பாட்டு, திருவிழா என்று கிராமங்களுக்கு உரித்தான ஒரு கதையில் நடிக்க தயாராக இருக்கிறார் அஜித்.

என்ன தான் பெரிய புட்கேட் படங்களாக இருந்தாலும், ரசிகர்கள் அதைப்பார்த்த உடன் மறந்து விடுவ ார்கள். ஆனால் கிராமியக் கதைகள் தான் காலம் கடந்தும் நினைவில் இருக்கும் என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார் அஜித்.

அஜித்தை விரைவில் இந்த மாதிரியான ஒரு கதையில் எதிர்பார்க்கலாம் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.


0 comments:

Post a Comment

POPULAR POSTS