1:20 AM
0



துப்பாக்கி படத்திற்கு டைட்டில் பிரச்சினையால் கோர்ட் தடை விதித்திருப்பதால் நடிகர் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தை பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை. ஆனால் அடுத்ததாக விஜய் நடிக்க� �ிருக்கும் கௌதம் வாசுதேவ் மேனனின் படமான யோஹான் பற்றி சில தகவல்கள் வெளிவந்துள்ளன. 

தமிழ் சினிமாவில் விஜய்க்கும், சூர்யாவிற்கும் இடையே நிலவும் ஹீரோயின் போட்டி பற்றி அனைவருக்கும் தெரியும்.
இவர் படத்தில் நடித்த ஹீரோயினை அவர் படத்தில் நடிக்க வைப்பது.

அவர் படத்தில் நடித்த ஹீரோயினை இவர் படத்தில் நடிக்க வைப்பது என அது இருவருக்கும் ஒரு கலர்ஃபுல்லான போட்டி.

ஹன்ஸிகா, அனுஷ்கா, நயன்தாரா, காஜல் அகர்வால் என தொடர்ந்து வந்த சங்கிலியில் மாட்டாமல் எஸ்கேப் ஆனவர் தான் நடிகை ஸ்ருதிஹாஸன். சூர்யாவுடன் ஏழாம் அறிவு படத்தில் நடித்த ஸ்ருதிஹாஸனிடம் தான் யோஹான் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம்.

ஏ.ஆர்.ரஹ்மான் தான் யோஹானின் இசையமைப்பாளர் என்கிறது சினிமா வட்டாரம்.

0 comments:

Post a Comment

POPULAR POSTS