நடிகை அனன்யா திருப்பதியில் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக, கேரளாவில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அனன்யாவுக்கும் திருச்சூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஞ்சநேயனுக்கும் பிப்� �வரி 2ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணமான தகவல் வெளியானதால் அனன்யா திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் அனன்யா, ஆஞ்சநேயனைதான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்ததால் அவருக்கும் அவர் பெற்றோருக்கும் பிரச்னை ஏற்பட்டது.
இதையடுத்து ஆஞ்சநேயன் வீட்டுக்குச் சென்ற அனன்யா, அங ்கிருந்தபடி மலையாள ஷூட்டிங்கிற்கு சென்று வந்ததாக கூறப்பட்டது. சமீபத்தில் அனன்யா அளித்த பேட்டியில், 'எனக்கு திருமணம் நடந்தால், வெளிப்படையாக அறிவிப்பேன்' என்றார்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் திருப்பதி கோயிலில் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கேரளாவில் தகவல் வெளியானது. இதுபற்றி அனன்யாவிடம் கேட்டபோது, 'நான் முன்பே சொன்ன மாதிரி, என் திருமணம் நடக� �கும்போது, முறைப்படி அறிவிப்பேன்' என்றார். திருப்பதியில் திருமணம் நடந்ததா என்பது குறித்து பதிலளிக்க மறுத்து விட்டார்.
0 comments:
Post a Comment