'கோப்பெருந்தேவி' என்றொரு படம். தமிழ்சினிமாவின் டாப் பெரும் தேவிகளில்பலரையும் இப்படத்தில் நடிப்பதற்காக தொடர்பு கொண்டாராம் டைரக்டர் அச்சுதன் சங்கர். அத்தனை பேரும் சொல்லி வைத்தாற் போல தெறித்து ஓட, சம்பளத்துல குறை வச்சுட்டோமோ என்று தனது பே� �்சை தானே ஒருமுறை ரீவைண்ட் பண்ணி பார்த்தாராம் அச்சுதன்.
ஆனால் சரியாதானே பேசியிருக்கோம். அப்புறம் ஏன் ஓட்டமெடுக்கிறாங்க என்ற அவரது குழப்பத்திற்கு அவரே விடையானார் சில மணித்துளிகளில். அதை சொல்வதற்கு முன்பு இவர் அழைத்த அந்த டாப் பெரும் தேவிகள் யார் யார் என்பதை சொன்னால்தானே ஒரு சுவாரஸ்யம் இருக்கும்? த்ரிஷாவும் ஸ்ரேயாவும்தான் அவர்கள்!
எடுத்த எடுப்பில� �யே 'ஒரு கோடி சம்பளம். கதை கேட்கிறீங்களா?' என்றாராம் அச்சுதன் சங்கர். இந்த படா படா சம்பளத்தில் படகென்று நிலைகுலைந்த த்ரிஷா, 'ஹீரோ யார், டைரக்டர் யார்?' என்று கேட்க, அங்குதான் பதுங்கு குழியை ரெடி பண்ணினார் இந்த பொல்லாத டைரக்டர். 'ரெண்டுமே நான்தாங்க' என்றாராம் நாணிக்கோணியபடி.
மயிலோட அழகை ரசிக்கிறேன்னு போக்கு காட்டிக்கிட்டே இப்படி பிரியாணி சட்டியையும் கழுவுறாங்களே எ� ��்று உஷாரான த்ரிஷா, செல்போன் இணைப்பை சட்டென்று துண்டிக்க, தன் நிலையிலிருந்து சற்றும் மனம் தளராத அச்சுதன் சங்கர் அடுத்ததாக ஸ்ரேயாவுக்கு போனை போட்டாராம்.
அங்க என்ன நடந்துருக்கும்னு தனியா வேற சொல்லணுமாக்கும்?
ஆமா... யாருய்யா அந்த அச்சுதன் சங்கர்? ஆர்வத்தை சட்டைப்பையில் வைத்துக் கொண்டே திரியும் புதுமுக இயக்குனர்.
0 comments:
Post a Comment