11:42 PM
0



முகமூடி ஒரு சூப்பர் ஹீரோ பார்முலா படம். இந்த படத்தில் நான் கஷ்டப்பட்டு நடித்தேன் என ஜீவா கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, நான் நடித்துக் கொண்டிருக்கும் முகமூடி ஒரு சூப்பர் ஹீரோ பார்மூலா படம். தமிழில் முதல் தடவையாக இது மாதிரியான படம் வருகி� �து.
இதில் நான் அணியும் காஸ்ட்யூம் சிலிக்கான் கலந்து செய்யப்பட்டது.
ஹாங்காங்கில் உள்ள பெரிய சர்க்கஸ் கம்பெனியொன்று இதனை வடிவமைத்து கொடுத்தது.
இந்த உடையின் 11 கிலோ. தினமும் இதை போட்டுக் கொண்டு நடிக்கவும், சண்டை போடவும் செய்தேன். பதினாறு நாட்கள் தொடர்ந்து இதனை அணிந்து கொண்டு நடித்ததால் காலிலும் கழுத்திலும் கட்டி ஏற்பட்டது. முகம் சிவப்பானது.
டைரக்டர் ம� �ஸ்கின் அரவணைப்பு இருந்ததால் சிரமத்தை பொறுத்துக் கொண்டேன். ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள் இதில் பணியாற்றியுள்ளனர், படம் சிறப்பாக வந்துள்ளது.
தொடர்ந்து நீதானே என் பொன் வசந்தம், என்றென்றும் புன்னகை, டேவிட் மற்றும் ரவி கே.சந்திரன் இயக்கும் படங்களில் நடிக்கிறேன்.
என்றென்றும் புன்னகையில் திரிஷா ஜோடியாக நடிக்கிறார். நீதானே என் பொன் வசந்தம் முடியும் தருவாயில் உள்ளது.
டேவிட் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறேன். எனது படங்களுக்கு ஆந்திராவில் வரவேற்பு இருப்பதால் தெலுங்கிலும் வெளியிடுகிறோம்.
குழந்தைகளுக்கான 3டி படமொன்றில் நடிக்க ஆர்வம் உள்ளது. கோ, முகமூடி, டேவிட் போன்றவை இரு கதாநாயகர்கள் கதை. இதுபோல் பிற கதாநாயகர்களுடன் தொடர்ந்து இணைந்து நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

POPULAR POSTS