முடிவுக்கு வந்து ஹீரோயின் பஞ்சாயத்து... மதகஜராஜாவில் விஷால் ஜோடி அஞ்சலி- வரலட்சுமி!
ஹன்ஸிகா நடிக்கிறார்... கார்த்திகா நடிக்கிறார்... என்றெல்லாம் பேசப்பட்டு கடைசியில் யார் ஹீரோயின் என்றே தெரியாமலிருந்த விஷாலின் மதகஜராஜா படத்தில், இப்போது நாயகிகளாக நடிக்கின்றனர் அஞ்சலியும் வரலட்சுமியும்!
இதுகுறித்து இன்று அதிகாரப்பூர� �வமாக அறிவித்துள்ளனர் தயாரிப்பாளர்கள் தரப்பில்.
விஷால் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
அவருக்கு ஜோடிதான் அஞ்சலியும் வரலட்சுமியும்.
ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், சந்தானம், நிதின் சத்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
காமெடி, ஆக்ஷன் என சுந்தர் சியின் வழக்கமான முத்திரையுடன் வரும் அதிரடிப் படம் இது.
இந்தப் படத்துக்காக � ��ெரும் செலவில் செட் போடப்பட்டு பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.
இந்தப் பாடல் காட்சியில் விஷாலுடன் குத்தாட்டம் போட்டவர் சதா!
0 comments:
Post a Comment