பிரபுதேவா நடிகை ஸ்ரீதேவியின் மும்பையில் கிரீன் ஏக்கர்ஸ் வீட்டில் விரைவில் குடியேறவிருக்கிறார்.
பிரவுதேவா போக்கிரி படத்தை இந்தியில் சல்மான் கானை வைத்து வாண்டட் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி சல்மானுக ்கு புத்துயிர் கொடுத்தது.
இதையடுத்து கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரவுடி ரத்தோர் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அட அதுவும் கண்டமேனிக்கு ஓடி கோடிக் கணக்கில் வசூலை அள்ளி புதிய சாதனை படைத்தது.
இதனால் பிரபுதேவாவுக்கு பாலிவுட்டில் பயங்கர கிராக்கியாகிவிட்டது. பிரபுதேவா ரீமேக் செய்தால் அந்த படம் கண்டிப்பா ஹிட்டாகிவிடும் என� �று பாலிவுட்டில் உள்ளவர்கள் நம்பும் அளவுக்கு ஆகிவிட்டது. இதையடுத்து நமக்கு தான் இங்கு இவ்வளவு கிராக்கி உள்ளதே நாம் ஏன் மும்பையில் தங்கிவிடக் கூடாது என்று நினைத்து பிரபுதேவா மும்பையில் வீடு தேடி அலைந்தார்.
இந்த செய்தி காத்துவாக்கில ஸ்ரீதேவியின் காதில் விழுந்தது. உடனே அவரும், அவருடைய கணவர் போனி கபூரும் பிரபுதேவாவை தொடர்பு கொண்டு வீடு தேடுகிறீர்களாமே, வேண்டும் � �ன்றால் எங்க கிரீன் ஏக்கர்ஸ் வீட்டில் வந்து தங்கிக்கலாமே என்று தெரிவித்துள்ளனர். ரொம்ப நல்லதாப் போச்சுன்னு நினைத்த பிரபுதேவாவும் விரைவில் ஸ்ரீதேவியி்ன் வீட்டில் குடியேறுகிறார்.
0 comments:
Post a Comment