கார்த்தியை அடுத்து சூர்யாவுடன் டூயட் பாடும் பிரணீதா
சூர்யாவை வைத்து கௌதம் மேனன் எடுக்கும் துப்பறியும் ஆனந்தன் படத்தின் கதாநாயகி பிரணீதா என்று தெரிய வந்துள்ளது.
கௌதம் மேனன் சூர்யாவை வைத்து துப்புறியும் ஆனந்தன் என்ற ஆக்ஷன் படத்தை எடுக்கவிருக்கிறார். இதில் சூர்யா 40களில் உள்ள கெட்டப்பில் � �ொமான்ட்டிக் டிடெடக்டிவாக வருகிறார்.
அவருக்கு ஜோடியாக சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த பிரணீதா தான் நடிக்கவிருக்கிறாராம்.
விஜயை வைத்து கௌதம் மேனன் எடுக்கும் யோஹான் முடிந்த பிறகு துப்பறியும் ஆனந்தன் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த படம் வரும் 2013ம் ஆண்டு துவக்கத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.
சகுனி படத்தை அடுத்து நடித்தால் பெரிய ஹீரோக்� �ளுடன் மட்டும் தான் நடிப்பேன் என்று பிரணீதா கன்டிஷன் போட்டதாக கோலிவுட்டில் பேச்சாகக் கிடந்தது. அவர் கன்டிஷன் போட்ட மாதிரி பெரிய ஹீரோவான சூர்யாவுடன் தான் ஜோடி சேர்ந்துள்ளார்.
பிரணீதாவுக்கு வாழ்வு தான்...
0 comments:
Post a Comment