11:27 PM
0


போராளி படத்துக்குப் பிறகு சமுத்திரக் கனி இயக்கும் புதிய படம் நிமிர்ந்து நில். ஜெயம் ரவி - அமலா பால்- மேக்னா ராஜ் நடிக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா இன்று ஏவிஎம்மில் நடந்தது.

நான் கடவுள், பாஸ் என்கிற பாஸ்� ��ரன் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த வாசன் விஷுவல்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
"ஒழுக்கம்தான் தனக்கு கற்பு மாதிரி என்று சொல்லி தலை நிமிர்ந்து வாழும் (ஹை தலைப்பு வந்துருச்சி...!) ஒரு சாதாரண குடும்பத்து இளைஞனின் கதை இது. தினமும் வீட்டை விட்டு கிளம்பும்போது, எதிர் கொள்ளும் பிரச்சினைகள்தான் இந்தப் படம். உன்னை நீ சரி செய்து கொள்... உலகம் தானாக சரியாகிவிடும� � என்பது ஒன்லைன்," என்கிறார் இயக்குநர் சமுத்திரக் கனி.
ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இந்தப் படம் ஒரேநேரத்தில் தெலுங்கிலும் தயாராகிறது. தெலுங்கில் ஹீரோ நானி. ஹீரோயின்கள் மாற்றமில்லை!

0 comments:

Post a Comment

POPULAR POSTS