12:18 AM
0
அடுத்த வாரம் கத்திரி க்குப் போகிறது தாண்டவம்! அடுத்த வாரம் கத்திரி க்குப் போகிறது தாண்டவம்!

விக்ரம் நடித்து பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள தாண்டவம் படம் அடுத்த வாரம் சென்சார் ஆய்வுக்குப் போகிறது. படத்திற்கு à ��ன்ன சான்றிதழ் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன் படக் குழுவினர் உள்ளனர்.

தெய்வத் திருமகன் படம் மூலம் விக்ரமுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்த இயக்குநர் ஏ.எல். விஜய்தான் தாண்டவம் படத்தை இயக்கியுள்ளார். அனுஷ்கா, எமி ஜாக்சன் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் கண் பார்வையற்றவராகவும் ஒரு கெட்டப்பில் வருகிறார் விக்ரம். இதுதான் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏகத்திற்கும் ஏற்றி விட்டுள்ளது.

இவர்கள் தவிர லட்சுமி ராய், சந்தானம், நாசர் உள்ளிட்டோரும் முக்கியப் பாத்திரங்களில் வருகிறார்கள். தற்போது அடுத்த வாரம் படம் சென்சார் சான்றிதழுக்காக செல்கிறதாம். இப்படத்தில் சண்டைக் காட்சிகள் நிறைய இருந்தாலும் கண்டிப்பாக யு சர்டிபிகேட் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் படக் குழுவினர் உள்ளனர். இருந்தாலும் யு ஏ க ிடைத்தால் என்ன செய்வது என்ற கவலையும் அவர்களிடம் உள்ளதாம்.

இப்படத்தின் பாடல்களை மிகப் பிரமாண்டமாக எடுத்துள்ளனராம். இசையை ஜ.வி.பிரகாஷ்குமார் கவனித்துள்ளார். அருமையான லொகேஷன்களில் பாடல்களைப் படமாக்கியிருப்பதால் விக்ரம் ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரை ரசிகர்களும் கூட பெரும் ஆவலுடன் ரசிக்கக் காத்துள்ளனர்.

சீயான் தாண்டவத்தைப் பார்க்க யாருக்குத்தான் ஆசை இர�¯ �க்காது...??
/

0 comments:

Post a Comment

POPULAR POSTS