9:45 PM
0


விஜய்யோடு போதும் சூர்யாவின் தம்பி கார்த்தி விஜய்யோடு போதும் சூர்யாவின் தம்பி கார்த்தி

பெரிய முயற்சி இல்லாமலேயே பெரிய ஆளாய் ஆகிவிடும் ராசி கார்த்தியுடையது. பொதுவாக தீபாவளி போன்ற பெரிய விசேஷ நாட்களில் பெரà ��ய நடிகர்களின் படங்கள் மோதும் அல்லது சோலோவாக விளையாடும்.

ஆனால் இந்த தீபாவளிக்கு விஜய்யின் துப்பாக்கி (தலைப்பு உறுதியில்லை!!)யோடு மோதுவது கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன்.

விஜய் - அஜீத், விஜய் - சூர்யா என்பது போய், இப்போது விஜய் - கார்த்தி என்றாகிவிட்டதில் கா ர்த்தியின் ரசிகர்களுக்கு குஷியோ குஷி.

இந்த தீபாவளிக்கு உறுதியாக வெளியாகும் படங்கள் இந்த இரண்டும்தான். நவம்பர் 13-ம் தேதிக்கு பெருமளவு திரையரங்குகளை இந்தப் படங்களுக்குப் பெறுவதில் கடும்போட்டியே நடந்து வருகிறது.

இதனால் தீபாவளியைக் குறிவைத்துள்ள நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட பிற படங்களின் ரிலீஸ் தேதி மாறக்கூடும் என்கிறார்கள்.

துப்பாக்கியை கலைப்புலி தாணு தயாரிக்க, ஜெமினி பிலிம்ஸ் விநியோகிக்கிறது. அலெக்ஸ் பாண்டியனை ஸ்டுடியோ கிரீன் தயாரித்து வெளியிடுகிறது.


/

0 comments:

Post a Comment

POPULAR POSTS