12:17 AM
0
சமந்தாவே சரணம்... ஜீவாவின் புகழ்மாலை! சமந்தாவே சரணம்... ஜீவாவின் புகழ்மாலை!

டப்பிங் ஆர்ட்டிஸ்டுகள் புண்ணியத்தில்தான் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறதுகோடம்பாக்கத்தில். நடிகைகள் பேசுகிற வசனங்களை அப்படியே வெளியிட்டால், ஒட்டுமொத்த கலவரங்களுக்கும் அதுவே காரணமாகிவிடும்.

அந்தளவுக்கு மென்று துப்புவார்கள் தமிழை. அப்படிப்பட்ட நாயகிகள் சிலரோடு நடித்த அனுபவமோ, என்னவோ? சமந்தாவுக்கு பூ போட்டு வணங்காத குறையாக சிலிர்க்கிறார் ஜீவா.

ஒரு மொழியை தெரிஞ்சுகிட்டு அர்த்தம் புரிஞ்சு நடிக்கறது எவ்வளவு அழகுன்னு சமந்தாவை பார்க்கும்போதுதான் தெரிஞ்சுகிட்டேன். அவங்களுக்கு தமிழும் தெரியும். தெலுங்கும் நல்லா பேசு வாங்க. நீதானே என் பொன் வசந்தம் படத்தை இரண்டு மொழியிலும் எடுக்கும்போது ரெண்டையும் உணர்ந்து அவங்க பேசி நடிச்சதுதான் அழகு என்றார் ஜீவா.

முகத்தில் உணர்ச்சிகளை கொண்டு வரணும்னா அந்த மொழியை நல்லா தெரிஞ்சுக்கறதுதான் முக்கியம். அந்த வகையில் சமந்தாவுக்கு ஒரு சல்யூட் என்கிற ஜீவா, தன் முகமூடி யை கழற்றி எறிந்துவிட்டு இந்த படத்தோடு ட்ராவல் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

இனி மிஷ்கின் பக்கம் தலைவச்சு படுப்பாரு?
/

0 comments:

Post a Comment

POPULAR POSTS