12:05 AM
0

இரண்டாம் திருமணம் பற்றி சிந்திக்கவில்லை: பிரபுதேவா இரண்டாம் திருமணம் பற்றி சிந்திக்கவில்லை: பிரபுதேவா

நயன்தாராவும், பிரபுதேவாவும் இரு வருடங்களு க்கு முன் காதல் வயப்பட்டனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தார்கள். இதற்காக மனைவி ரம்லத்தை பிரபுதேவா விவாகரத்து செய்தார். நயன்தாராவும், இந்து மதத்துக்கு மாறினார். சினிமாவுக்கும் முழுக்கு போட்டார்.

திருமண தேதி நெருங்கும்போது திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் காதலை முறித்துக் கொண்டு பிரிந்தனர். நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். பிரபுதேவா இந்திப் படங்களை இயக்குவதில் பிசியாகி விட்டார்.

மீண்டும் இரண்டாம் திருமணம் செய்து கொள்வீர்களா? என்று பிரபுதேவாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

மீண்டும் திருமணம் செய்து கொள்வது பற்றி தற்போது நான் சிந்திக்கவில்லை. சினிமாவில் முழு நேரமும் பிசியாக வேலை செய்து கொண்டு இருக்கிறேன். இந்த நிலையில் திருமணம் பற்றி திட்டமிட எனக்கு ஏது நேரம் இருக்கிறது. என் சொந்த வாழ்க்கை பற்றி யோசிப்பதற்கு நேரம் இல்லை. சினிமாவà ��ல் நிறைய பணிகள் இருக்கிறது. என் முழு கவனத்தையும் அதில்தான் செலுத்துகிறேன்.

என் குழந்தைகள் விடுமுறையில் இருக்கும்போது அவர்களுடன் நேரத்தை செலவிடுகிறேன். சல்மான்கானை வைத்து மீண்டும் படம் எடுப்பது பற்றி இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை. அவரை 15 வருட ங்களாக எனக்கு தெரியும். நாங்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்துள்ளோம்.

இந்தியில் நிறைய பணம் முதலீடு செய்து படம் எடுக்கின்றனர். எனவே பட வேலைகளில் முழுமையாக ஈடுபடுகிறார்கள். படப்பிடிப்பை துவங்கும் போதே ரிலீஸ் தேதியையும் அறிவித்து விடுகின்றனர். இந்திப் படங்களில் பணியாற்றுவதால் மும்பையில் வாடகைக்கு வீடு பார்த்து குடியேறியுள்ளே�® �். இங்கு சொந்தமாக வீடு எதுவும் வாங்கவில்லை.

இவ்வாறு பிரபுதேவா கூறினார்.


/

0 comments:

Post a Comment

POPULAR POSTS