12:15 AM
0



மாற்றானை முந்தும் சாருலதா..! மாற்றானை முந்தும் சாருலதா..!

ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் கதை ஏற்கனவே வந்திருக்கிறது. ஆனால் அந்த இரட்டையர்கள் இரு வேறு நடிகர்களாக இருப்பார்கள்.

உலக சினிமாவில் முதல்முறையாக இரட்டையர்கள் இருவராகவும் ஒரே நடிகர் நà ��ித்திருப்பது இதுவே முதல்முறை என்று நெஞ்சு வலிக்க தன்னைத்தானே தட்டிக் கொண்டார் கே.வி.ஆனந்த். ஆனால் இது உண்மையா? உலக அளவுக்கெல்லாம் போக வேண்டாம். உள்ளூர் அளவிலேயே இதனை பிசுபிசுக்க வைத்துள்ளது சாருலதா.

இதில் ப்‌ரியாமணி ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதி‌ரிகளாக நடித்துள்ளார். தாய்லாந்து படமான அரோனின் அப்பட்ட காப்பி. ஹன்ஸ்ரா‌ஜ் சக்சேனா போலீஸ் கஸ்டடிக்குப் பிறகà � தனியாக வந்து விநியோகிக்கும் முதல் படம். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் வெளியாகிறது.

சக்சேனாவின் முதல் அறிவிப்புபடி சென்ற மாதமே படம் வெளியாகியிருக்க வேண்டும். சில நடைமுறை சிக்கல்கள். இந்த மாதம் படம் வெளிவருகிறது. அக்டோபர் 12 மாற்றான் வெளிவருவதற்குள் மூன்று மொழிகளிலும் சாருலதாவை வெளியிடுவதில் தீவிரமாக உள்ளனர். ‌ரிலீஸ் தேதி தெ‌ரியாத நிலையில் இ ன்னும் சில தினங்களில் என்று தியேட்டர் டீட்டெயிலுடன் விளம்பரம் செய்திருக்கிறார்கள்.

ஆக, மாற்றானைவிட முன்னதாக சாருலதா வெண்திரைக்கு வந்துவிடும் என்பது திண்ணம்.
/

0 comments:

Post a Comment

POPULAR POSTS