ரஜினியும் கமலும் கூட சேர்ந்து நடித்துவிடுவார்கள் போலிருக்கிறது. இந்த விவேக்-வடிவேலு ரெண்டு பேரையும் ஒன்று சேர்க்க துடிக்கும் ஒரு தயாரிப்பாளருக்கு உருப்படியான பதில் இதுவரை வரவேய� �ல்லையாம்.
பசுமைப்புரட்சி செய்வதற்காக நாடெல்லாம் இப்போது சுற்றி வரும் விவேக், தமிழ்சினிமாவில் முன்பு செய்த சிரிப்பு புரட்சியெல்லாம் கி.மு வாகிவிட்டது. இவர் பிரச்சனை இப்படி என்றால், இவரது நேரெதிர் போட்டியாளரான வடிவேலு திடீர் அரசியல் ஆசையால் எலிப்பொறியில் சிக்கிக் கொண்டு வாலில் செம சிராய்ப்போடு திரிந்து கொண்டிருக்கிறார்.
வாயுள்ள புள்ளைக்கு � ��ருஷமெல்லாம் கோடி என்பது மாதிரி, இடையில் புகுந்த சந்தானம் செம கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் வடிவேலும் விவேக்கும் சேர்ந்து நடித்தால் அந்த படம் ஷியூர் ஹிட் என்ற முடிவுக்கு வந்தார் பிரபல தயாரிப்பாளர் ஒருவர். இதற்காக இருவரையும் அப்ரோச் செய்தவருக்கு விவேக் சைடிலிருந்து செம ரெஸ்பான்ஸ். வடிவேலுதான் இன்னமும் ...ந்தா சொல்றேன் பொறுங்க என்று நழுவிக் க� �ண்டிருக்கிறாராம்.
'இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கும் எதிர்காலம்'னு திரிசூலம் படத்துல சிவாஜி பாடுவாரு. இந்த பாட்டை வடிவேலு-விவேக்குக்கு டெடிகேட் பண்ணுங்கப்பா..
0 comments:
Post a Comment