11:03 PM
0



விஜய் உடன் தாண்டவம், ஷங்கரின் 'ஐ', இந்தியில் டேவிட் என மீண்டும் பிஸியாகிவிட்டார் விக்ரம். லண்டனின் தாண்டவம் சூட்டிங் முடிந்து களைப்பில் இருந்த விக்ரமிடம் பேசிய போதுதான் சினிமாவைத் தவிர வேறு எதைப்பற்றியும் அவருக்கு ஆர்வம் இல்லை என்பது தெ� ��ிந்தது.
நான் சினிமாவிற்குள் வரும் போது வசந்தம் என்னை வரவேற்கலை. சினிமா உலகின் போட்டி ரேஸில் என்றைக்கும் நான் இருந்ததில்லை. ஏனெனில் ஹிட் என்பதை விட திறமைதான் காலத்திற்கு அப்புறம் நிற்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படமும் போராடி வந்த வாழ்க்கை இது. நான் நடிக்க வந்தப்ப முதல் வரிசையும் இல்லாம கடைசி வரிசையும் இல்லாம இருந்தேன்.
நானே கையை, காலை ஊன்றி எழுந்திருச் சி நடந்தேன். ஆனால் என் பையனுக்கு அந்த கஷ்டம் இருக்காது. அவனுக்கு என்ன வேணுமோ அந்த சுதந்திரம் இருக்கும். என் பையன் துருவ் என்னை மாதிரியே இருக்கான்னு சொல்றாங்க. அவன் இயக்குநராகவோ, நடிகராகவோ நிச்சயம் வருவான்னு தோணுது.
இப்போ இருக்கிற ஹீரோக்களில் ஆர்யா, ஜீவா, சிம்பு, தனுஷ், கார்த்தி என அடுத்த செட் தயாராகிட்டாங்க. எனக்கு கார்த்தியோட மேனரிஸம் பிடிக்கும். நடிப்பு, சிரிப்ப ு எல்லாமே புதுசா இருக்கும். என்னைக் கேட்டா அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் கார்த்திதான்னு சொல்லுவேன்.
தெய்வத்திருமகள் டீம் அப்படியே தாண்டவம்ல வர்றோம். அமலாவுக்கு பதிலா இதில எமி ஜாக்சன். படம் ரொம்ப ஸ்டைலிஷா வந்திருக்கு. அந்நியன் படத்துக்கு அப்புறம் ஷங்கரோட ஐ படத்துல இணையிறேன். அநேகமாக தலைப்பு மாறினாலும் மாறலாம். கதையை கேட்ட உடனே ஒரு எபிக் மாதிரி இருக்குன்னு ரஹ்மா� ��் சொல்லியிருக்கார்.
அந்நியன் படத்தை விட பத்து மடங்கு அதிகமா உழைக்க வேண்டியிருக்கும். இந்தியில டேவிட் படத்துல எனக்கு மீனவன் கதாபாத்திரம். ஒரு ஹீரோ எப்படி எல்லாம் இருக்க கூடாதோ அப்படி எல்லாம் இருப்பேன். மணிசார், ஷங்கர், பாலா இவங்ககிட்ட எவ்வளவு படங்கள்னாலும் நடிக்கலாம்.
எனக்கு டிவியை விட சினிமாதான் செட் ஆகும். அதனாலதான் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை நிதானமா யோசிச்சு � �ேண்டாம்னு சொல்லிட்டேன். டிவியில தினமும் நம்ம முகம் வரும் அதனால் மக்கள் நாளைக்கு பாத்துக்கலாம்னு போயிடுவாங்க. ஆனா சினிமா 6 மாசத்துக்கு அப்புறம்தான் வரும் அதனால் மக்கள் ஆர்வமா நான் நடிச்ச படத்தை பார்க்க வருவாங்க. என் நண்பர்களும் டிவி எனக்கு வேண்டாம்னு சொன்னாங்க அதான் அவங்க சொன்னதை கேட்டுக்கிட்டேன் என்று சந்தோசமாய் கூறி விடை பெற்றார் விக்ரம்.

0 comments:

Post a Comment

POPULAR POSTS