காஜல் அகர்வாலின் கால்ஷீட் சொதப்பலால் விஜய், சூர்யா ஆகியோரின் பெரிய படங்கள் தாமதமாகின்றன.
பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட காஜலை தமிழில் ஆரம்பத்தில் கண்டு கொள்ளவே இல்லை. பின்னர், தெலுங்குப் படம் மகதீராவின் வெற்றி அவரை டாப்புக்� �ு கொண்டு போய்விட்டது.
தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்கள் விரும்பும் நாயகிகளில் ஒருவராகிவிட்டார்.
காஜல்அகர்வால் ஒரே நேரத்தில் சூர்யா ஜோடியாக மாற்றான், விஜய் ஜோடியாக துப்பாக்கி இவை தவிர மேலும் இரண்டு தெலுங்கு படங்கள் என நான்கு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார்.
இப்படி பிய்த்து பிய்த்து கால்ஷீட்டை கொடுத்துவிட்டதால், எந்தப் படத்திலு� ��் அவரால் முழுமையாக நடிக்கமுடியவில்லை.
இதனால் மாற்றான் படத்தில் பாடல் காட்சியில் அவரால் நடிக்க முடியவில்லை. இதே போல துப்பாக்கி படத்துக்கும் இரு பாடல் காட்சிகள் பாக்கி உள்ளனவாம். தெலுங்கு படங்களில் நடிப்பதால் அவரால் இந்த பாடல் காட்சிகளை முடித்து கொடுக்க முடியவில்லை.
இப்படி இரு பெரிய படங்களின் வெளியீட்டில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு காஜல் காரணமாகிவிட்டதால், � �ம்பந்தப்பட்ட இயக்குநர்கள் கடுப்பில் உள்ளார்களாம்!
0 comments:
Post a Comment