மருத்துவரை சந்தித்தார் சந்தானம் அதிர்ச்சியில் ஒரு 'வாய்ப்பூட்டு'
சாதி மத பேதமில்லாமல் ஒட்டுமொத்த தமிழுலகத்தையே சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் சந்தானம். ஆனால் அவருக்குள்ளும் ஒரு 'வன்னிய குல சத்திரியன்' இஸ்திரி போட்ட இஞ்சிமரபா சட்டையோடு திரிந்து கொண்டிருப்பது பவரும் அறியாத பரம ரகசியம்.
சந்� ��ர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தனது சொந்த பந்தங்களிடம் 'எனக்கு மருத்துவரய்யாவை ரொம்ப புடிக்கும்' என்று சொல்லிக் கொண்டேயிருப்பாராம்.
டாஸ்மாக் கடையிருக்கும் ஏரியாவிலெல்லாம் பூட்டோடு திரிந்து கொண்டிருக்கும் பா.ம.க தலைமை மீது டாஸ்மாக்கின் அறிவிக்கப்படாத அம்பாசிடராகவே வாழ்ந்து கொண்டிருக்கும் சந்தானம் பற்று கொண்டிருப்பது இனிப்பான முரணல்லவா?
இதுவரை � ��வரை சந்திக்க சந்தர்ப்பம் வாய்க்காமலிருந்தது சந்தானத்திற்கு. கும்பகோணத்தில் நடைபெற்று வரும் 'கண்ணா லட்டு திங்க ஆசையா' படப்பிடிப்பின்போது ஒரே ஓட்டலில் தங்கியிருந்தார்களாம் டாக்டரும் சந்தானமும். தனது நெடுநாள் கனவை அங்கே நிறைவேற்றிக் கொண்டார் சந்தானம்.
'தம்பிதான் சந்தானமா? கேள்விப்பட்டிருக்கேன். நான் படமெல்லாம் பாக்குறதில்லப்பா...' என்று மருத்துவர் சொல்ல, நல� �லவேளைப்பா என்று மனசுக்குள் ஆஃப் ஆனாராம் சந்தானம். இல்லையென்றால் மருத்துவர் கையிலிருக்கிற டாஸ்மாக் பூட்டு சந்தானத்தில் வாயில் அல்லவா தொங்கியிருக்கும்?
.
0 comments:
Post a Comment