9:54 PM
0






மாற்றானும் ஹிட்டாகிவிட்டால் சூர்யாவின் ஒவ்வொரு நரம்பும் எலும்பாகிவிடும்என்று கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் இதே கோடம்பாக்கத்தை சேர்ந்த முன்னணி இயக்குனர்கள் சிலர். தங்களுக்கு கால்ஷீட் தரவில்லையே என்ற ஆதங்கத்திலும் ஆத்திரத்த ிலும் அவர்கள் இப்படி பேசி வருவது இயற்கையே.

ஆனால் இப்படியெல்லாம் பேச வைக்கிற அளவுக்கு அந்த வயிற்றெரிச்சலில் மேலும் சில சுள்ளிகளை போட்டு அந்த தீயை வளர்த்துக் கொண்டிருக்கிறாராம் சூர்யா. அதற்கு உதாரணமாக சொல்லப்படும் ஒரு தகவல் இப்போது.

புகழ் பெற்ற கோவிலின் பெயரை தன் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் அந்த இயக்குனர் சமீபத்தில் சொந்தப்படங்களை எடுத்து வெற� �றியும் பெற்றுவருகிறார். திடீரென்று இவர் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தாராம் சூர்யா. இதை தொடர்ந்து சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தார் டைரக்டர். எல்லாம் சில வாரங்கள்தான்.

சட்டென்று அவரை அழைத்த சூர்யா, நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் கொடுக்க முடியும்ங்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. ஸாரி... என்று கூறிவிட்டாராம்.

திருப்பதி ஏழுமலையானே, சிலருக்கு நிலையான யோசனையை க� ��டு என்று வேண்டிக் கொண்டிருக்கிறது மொத்த கம்பெனியும்.





0 comments:

Post a Comment

POPULAR POSTS