குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய சூர்யா: ரசிகர்கள் ரத்ததானம்
நடிகர் சூர்யா இன்று தனது பிறந்த நாளை கெண்டாடினார். அவர் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடிக்கும் 'மாற்றான்' பட வேலைகளில் கடந்த சில தினங்களாக தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். பிறந்தநாளையொட்டி அவற்றை தற்காலிகமாக நிறுத்தி விட்டு தியா கராயநகரில் உள்ள வீட்டில் மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.
நடிகர், நடிகைகள் பலர் அவருக்கு வாழ்த்து செய்திகள் அனுப்பி இருந்தனர். சூர்யா பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர். தேனாம்பேட்டை எல்லையம்மன் கோவில் கல்யாண மண்டபத்தில் ரத்ததான முகாம் நடந்தது. திருவான்மியூர் எம்.எம்.ஆர். மதன் தலைமையில் 100 பேர் ரத� �ததானம் செய்தார்கள்.
சூர்யா பிறந்ததின 10-வது ரத்ததான முகாமாக இது நடத்தப்பட்டது. இதுவரை 1000 பேர் ரத்ததானம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ரத்ததான முகாமை திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பாண்டியன் தொடங்கி வைத்தார்.
ரத்ததான முகாமில் சூர்யா ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஆர்.கே. சந்திரரேஷ், பி.விவேக், சங்கர், எஸ்.தாமு, வி.கிஷோர், சுனில், ரஞ்சித், உள்ளிட்ட பலர் பங்கேற்ற� �ர். ஏழைகளுக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது.
பிறந்த நாளையொட்டி சூர்யா அளித்த பேட்டியில் ஒரு வருடமாக 'மாற்றான்' பட வேலைகளில் தீவிரமாக இருந்ததால் குடும்பத்தினருடன் செலவிட முடியவில்லை. பிறந்த நாளையொட்டி இன்று முழுவதும் அவர்களுடன் இருப்பேன் என்றார்.
0 comments:
Post a Comment