திரண்டு வந்த ரசிகர் பட்டாளம்.. புதிய சாதனை படைத்த அஜீத்!
இப்படி ஒரு ரசிகர் பட்டாளம் மற்ற நடிகர்களுக்கு இருக்குமா என்று தெரியவில்லை. அந்த வகையில் அஜீத் கொடுத்து வைத்தவர்தான்.
ரசிகர் மன்றமே தேவையில்லை என்று ஒரே ஸ்டேட்மென்ட்டில் கலைத்துப் போட்டு போய்க் கொண்டே இருந்தவர்தான் அஜீத்.
< /a>ஆனால் அதற்கெல்லாம் நாங்கள் சளைத்து விடுவோமா என்று அஜீத்தின் பின்னால் ராணுவம் போல அணிவகுத்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
தமிழ் நடிகர்கள் யாருமே இதுவரை இப்படி ஒரு முடிவை எடுத்ததில்லை. எனக்கு மன்றமே தேவையில்லை என்று தைரியமாகவும், தீர்க்கமாகவும் சொல்லி ஒரு நல்ல நாளாகப் பார்த்து மன்றத்தைக் கலைத்தவர் அஜீத். அதைப் பார்த்து அனைவருமே ஆச்சரியப்பட� ��டனர். இனி எங்கே அஜீத் பின்னால் ரசிகர்கள் நிற்கப் போகிறார்கள். அதிருப்தி அடைந்து கலைந்து போய் விடுவார்கள் என்றுதான் நினைத்தனர்.
ஆனால் மங்காத்தா படத்தின் ரிலீஸின்போது திரண்ட அஜீத் ரசிகர்கள் அனைவரையும் வியக்க வைத்தனர். மன்றம் வேண்டாம் என்று அஜீத் சொன்னாலும், அதைப் பொருட்படுத்தாமல் மிகப் பெரிய அளவில் மங்காத்தாவை கொண்டாடினர் அஜீத் ரசிகர்கள்.
இப்போது பில்லா 2 பட ரிலீஸின்போதும் அஜீத் ரசிகர்கள் கலக்கி விட்டார்கள். திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக் கோலம்தான். அஜீத் கட் அவுட்டுக்கு பூஜை செய்வது, பாலாபிஷேகம் செய்வது என வழக்கம் போல கலக்கிய அவர்கள் மேலும் ஒரு படி போய் மிகப் பெரிய அளவில் செலவு செய்து பூமாலையும் போட்டுள்ளனர் அஜீத் கட் அவுட்டுக்கு.
பெங்களூரிலிருந்து சென்னைக்கு படையெடுத்து வந்திருந்த அஜீத் ரசிகர்கள் ஆல்பட் திய� �ட்டரில் மிகப் பெரிய ராட்சத பூமாலையை போட்டு அனைவரையும் வியக்க வைத்தனர். இந்த பூ வேலைப்பாட்டுக்கான செலவு ரூ ஒன்றரை லட்சமாம். இதைக் கேட்டவுடன் பலருக்கும் மயக்கம்தான் வந்தது. இவ்வளவு பெரிய செலவு செய்து அஜீத்தை கொண்டாடும் ரசிகர்களா என்று வியந்து விட்டனர்.
0 comments:
Post a Comment