சிம்பு LOVE ANTHEM...!போட்டியாக தனுஷ் ஆல்பம் ..!
'3' படம் வெளிவந்த பிறகு தனுஷை அவரது டிவிட்டர் இணையத்தில் கூட காண முடிவதில்லை.
வெற்றிமாறன் படத்தில் ஒப்பந்தமானவுடன் "க்ளவுட் நைன் மூவிஸ் தயாரிப்பில் வெற்றி படத்தில் நடிக்க இரு� �்கிறேன். எனது அடுத்த படங்கள் மரியான், ராஜன்ஹா அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் படம்" என்று ஏப்ரல் 18ம் தேதி அறிவித்தவர் இன்று வரை டிவிட்டர் இணையம் பக்கம் வருவதில்லை.
காரணம் என்னவாக இருக்கும் என்று தனுஷிற்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்ததில், தனுஷ் தனியாக ஆல்பம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம்.
மும்பையில் இதற்கான பணியில் மும� �முரமாக இருக்கும் தனுஷ் ஆல்பத்தின் முழுபொறுப்பையும் ஏற்று இருக்கிறாராம். பாடல்கள், இசை அனைத்தும் இவரே.
வெற்றிமாறனையும் அடிக்கடி மும்பைக்கு வாங்களேன் என்று கூப்பிட்டு தனது ஆல்பம் பணிகளை போட்டுக்காட்டி, அவர் ஏதாவது திருத்தம் சொன்னால் உடனே மாற்றி அமைக்கிறாராம்.
இந்த ஆல்பம் கூடிய விரைவில் வெளிவர இருக்கிறதாம்.
சிம்பு கூட LOVE ANTHEM ஆல்பத்தின் இறுதிகட்ட பணிகள� �ல் ஈடுபட்டு கொண்டே இருக்கிறார். இருவரும் துபாயில் நீண்ட நேரம் SIIMA விருதுகள் வழங்கும் விழாவில் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
0 comments:
Post a Comment