2:06 AM
0



மங்காத்தா படத்தில் ஆரம்பித்தது அந்த சண்டை. லட்சுமிராயும், த்ரிஷாவும் நடித்த அந்தப் படத்தில், த்ரிஷா ஒப்புக்குதான் ஹீரோயின். கலக்கியது லட்சுமி ராய்தான்.
இதில் த்ரிஷாவுக்கு ஏக மனவருத்தம். காரணம், இந்த இரு வேடங்களையும் முதலில் த்ரிஷாவிடம� � சொல்லி, விரும்பிய வேடத்தில் நடிக்குமாறு சாய்ஸ் கொடுத்திருந்தாராம் வெங்கட் பிரபு.
அதில் த்ரிஷா வேண்டாம் என்ற வேடத்தில் லட்சுமிராய் கலக்கிவிட்டார் என்று செய்திகள் வெளியானதன் விளைவு, லட்சுமி ராய் பற்றி த்ரிஷா வெளிப்படையாக கமெண்ட் அடித்தார்.
பதிலுக்கு லட்சுமி ராய் போட்டுத் தாக்க, கடந்த ஓராண்டு காலமாக நீடித்தது இருவருக்கும் பனிப்போர். இருவரும் விழாக்க� ��ில் சந்திப்பதைக் கூட தவிர்த்தனர்.
இப்போது இருவரும் சண்டைக்கு பை சொல்லி, நட்புக்கு ஹாய் சொல்லியுள்ளனர்.
சமீபத்தில் நடந்த துபாய் விருது வழங்கும் விழாவில் லட்சுமி ராயும் த்ரிஷாவும் அருகருகே அமரும் வாய்ப்பு. விழாவுக்குப் பின்னர், நட்சத்திர ஓட்டலில் விடிய விடிய நடந்த பார்ட்டியின்போது, இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொண்டார்களாம்.
தொடர்ந்து, இருவரும் கட்டிப் பி டித்துக் கொண்டு, நெருங்கிய தோழிகளாகிவிட்டார்களாம். விருந்து முடியும் வரை பிரியாமலிருந்தவர்கள், பிரியா விடைபெற்று வீடு திரும்பியதாக நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்!

0 comments:

Post a Comment

POPULAR POSTS