10:03 PM
0

ஷங்கர் இயக்கும் ஐ படத்தில் விக்ரம் ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்கக் கூடும் என தெரிகிறது.இந்தப் படத்தின் நாயகியாக முதலில் ஒப்பந்தமானவர் சமந்தா. ஆனால் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி (தோல் அலர்ஜி) அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டதாகத் தெரிகிறது. இதற்கு முன் மணிரத்னத்தின் கடல் படத்திலிருந்தும் அவர் விலகிக் கொண்டார்.எனவே சருமப் பிரச்சினைதான் காரணமா அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா என்று கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளது கோடம்பாக்கம்.இந்த நிலையில், சமந்தாவுக்கு பதில் எமி ஜாக்ஸனை ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிகிறது.கதைப்படி இரண்டு ஹீரோயின்கள். இன்னொரு ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கக் கூடும் என்கிறார்கள். ஸ்ருதி ஹாஸன் பெயரும் பரிசீலனையில் உள்ளதாம்.இப்போது ச� ��னாவில் லொகேஷன் பார்க்கப் போயிருக்கும் ஷங்கர், அடுத்த வாரம் திரும்புகிறாராம். ஜூலை 15-ம் தேதி ஷூட்டிங் ஆரம்பம்!

0 comments:

Post a Comment

POPULAR POSTS