நீச்சல் உடைக்கு “நோ” சொன்ன ஹன்சிகா
தமிழ் படத்தில் நீச்சல் உடையில் நடிக்க மறுத்துள்ளார் ஹன்சிகா மோத்வானி.
இதுபற்றி அவர் கூறியதாவது, விஷால் நடிக்கும் படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்டதால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனதா? என்கிறார்கள். இது வதந் தி.
எனக்கு என்ன தகுதியோ அந்த சம்பளம் தான் பெறுகிறேன். திரைக்கதை தான் எனக்கு முக்கியம். அதன்பிறகுதான் சம்பளம் மற்ற விஷயங்கள்.
என்னிடம் கதை சொல்லும் போது அதை முழுமையாக கேட்கிறேன். பிடித்தால் நடிக்கிறேன். இல்லாவிட்டால் ஏற்பதில்லை.
நான் வெளிப்படையான குணம் கொண்டவள். எதையும் பெரிதாகத்தான் கற்பனை செய்வேன். சிறிதாக எதையும் நினைக்க மாட்டேன். கடைசியில் கடின � ��ழைப்புதான் எனது குறிக்கோளாக இருக்கும்.
சிம்புவின் வேட்டை மன்னன் படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நடிகைகள் நடிக்கிறார்களே அதில் நடிப்பது ஏன்? என்கிறார்கள். நான் எப்போதுமே பாதுகாப்பான இடத்தையே விரும்புகிறேன்.
இதில் நிறைய கதாநாயகிகள் நடித்தாலும் எனது வேடம் முக்கியமானதாக அமைந்துள்ளது. அதில் என்னை தக்க வைத்துக்கொள்ள முடியும். எனவேதான் நடிக்கிறேன்.
இந்தி டெல்லி ப ெல்லி ரீமேக்கான சேட்டை படத்தில் நீச்சல் உடையில் நடிக்கிறீர்களா? என்கிறார்கள். நீச்சல் உடையில் நடிக்கும்படி என்னிடம் இயக்குனர் கூறினார்.
அதற்கு நான் இன்னும் மனதளவில் தயாராகவில்லை. எனவே நடிக்க மறுத்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment