1:53 AM
0


அமீரின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஆதிபகவன் திரைப்படத்தின் சண்டை காட்சிக்கள் ராஜஸ்தானில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயம்ரவி, நீது சந்திரா நடிக்கும் திரைப்படம் ஆதி பகவன். படத்தில் படப்பி� ��ிப்புகள் இறுதிகட்டம் கோவாவில் நடைபெற்றன. தற்போது
சண்டைகாட்சிகள் ராஜஸ்தானில் சுடச்சுட படமாக்கப்பட உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி திரைப்படத்தின் இயக்குநர் அமீர் கூறியதாவது, கோவாவில் கடைசியாக நடந்த ஆதிபகவன் ஷூட்டிங்கே இறுதிகட்டமாக நடந்து முடிவதாக இருந்தது. ஆனால் படத்தில் சண்டை காட்சி ஒன்று இடம்பெறுவது கதைக்கு அவச ியம் என கருதினேன். இதற்கிடையே ஹீரோயின் நீது சந்திரா ஏற்கனவே கிரேக்க படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்ததால் அதில் நடிக்க சைப்ரஸ் சென்றுவிட்டார்.
மேலும் ஜெயம் ரவியும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படத்தின் ஷூட்டிங்கில் நடிக்க சென்றார். இதனால் இருவரது கால்ஷீட் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. வரும் ஜூலை மாதம் 6ம் தேதி ஜெய்சல்மர் மற்றும் ஜெய்ப்பூரில் ஒரு சில சண்டை காட்சிகள� �� படமாக்கப்பட உள்ளது. அத்துடன் ஷூட்டிங் முடிகிறது. ஏற்கனவே பட ரிலீஸுக்கான மற்ற பணிகள் நடந்து வருகிறது. விரைவில் படம் ரிலீஸ் ஆகும். இவ்வாறு அமீர் கூறினார்.

0 comments:

Post a Comment

POPULAR POSTS