9:07 PM
0

பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. இவர் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு தற்கொலை செய்து இறந்தார். சில்க் ஸ்மிதா வாழ்க்கையை இந்தியில் டர்ட்டி பிக்சர் என்ற படமாக எடுத்து வெளியிட்டனர்.இப்படம் வெற்றிகரமாக ஓடி பல கோடிகள் வசூல் ஈட்டியது. இதில் சில்க்ஸ்மிதா வேடத்தில் நடித்த வித்யாபாலன் சிறந்த நடிக� �க்கான தேசிய விருதை பெற்றார். இதையடுத்து தமிழ், மலையாளம், கன்னட மொழிகளிலும் சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக எடுக்கின்றனர்.மலையாளத்தில் சனாகான் நடிக்கிறார். தெலுங்கில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நமீதா நடிப்பார் என தெரிகிறது. ஏற்கனவே இந்த வேடத்துக்கு திரிஷா, அனுஷ்கா பரிசீலிக்கப்பட்டனர். அவர்களிடம் பேச்சு வார்த்தையும் நடந்தது. ஆனால் சில்க்ஸ்மிதா வேடத்தில் நடிக்க இரு� �ரும் மறுத்து விட்டனர்.இதையடுத்து நமீதாவிடம் பேசி வருகிறார்கள். அவர் இதில் நடிக்க சம்மதித்து உள்ளார். இதுகுறித்து நமீதா கூறும்போது, 'சில்க் ஸ்மிதா 1980 மற்றும் 90களில் திரையுலகில் கவர்ச்சி ராணியாக இருந்தார். இப்போது என்னை ரசிகர்கள் சில்க் என்றே அழைக்கின்றனர். நான் சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகை. அவர் வேடத்தில் நடிப்பதற்காக சம்பளத்தை குறைத்துக் கொள்ள தயார்' என்றார்.

0 comments:

Post a Comment

POPULAR POSTS