சென்னை, செப். 15-
ஹாலிவுட் ஆக்ஷன் படமான ரெசிடென்ட் ஈவில் ஏற்கனவே பல பாகங்களாக வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது. தற்போது இதன் ஐந்தாம்பாகம் ரெசிடென்ட் ஈவில் ரீட்ரிபூஷன் என்ற பெயரில் வருகிறது. டபிள்யூ எஸ். அண்டர்சன் இயக்கியுள்ளார். மில்லாஜாவே, விச், சின்ன, கிளாரி, ஜோஹன்ட சர்ப் லிபிங்கிங் ஆகியோர் நடித்துள்ளனர்.
வீடியோ கேம்ஸ் சீரிஸ் அடிப்படையில் இ தன் கதை பின்னப்பட்டு உள்ளது. அம்பரல்லா கார்ப்பரேஷன் அமைப்பு பல மர்மங்களுடன் செயல்படுகிறது. அதன் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க ஆலிஸ் முயல்கிறாள். இதற்கு பதிலடியாக நடக்கும் அதிரடி ஆக்ஷன் சண்டைப்பிரியர்களுக்கு விருந்தாக உருவாக்கப்பட்டு உள்ளது. டோக்கியோ, நியூயார்க், லண்டன் நகரங்களில் கதை நிகழ்வதாக காட்டப்படுகிறது.
இப்படம் 3டி மற்றும் 2டியில் வெளிவருகிறது. � �ிரமாண்ட அரங்குகள் அமைத்து சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன. வருகிற 28-ந்தேதி உலகம் முழுவதிலும் இப்படம் ரிலீசாகிறது இந்தியாவில் சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது. தமிழகத்தில் தமிழில் டப்பிங் செய்து படத்தை வெயிடுகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment