5:03 AM
0
இந்தி நடிகை ராணிமுகர்ஜியின் ரசிகன் நான் பிருதிவிராஜ் இந்தி நடிகை ராணிமுகர்ஜியின் ரசிகன் நான் பிருதிவிராஜ்
இந்தி நடிகை ராணிமுகர்ஜியின் ரசிகன் நான் பிருதிவிராஜ்

சென்னை, செப். 15-

தமிழ், மலையாள படங்களில் நடித்த பிருதிவிராஜ் இந்திக்கு போய் உள்ளார். அங்கு அய்யா என்ற படத்தில் நடிக்கிறார். இதில் பிருதிவிராஜ் ஜோடியாக ராணி முகர்ஜி நடிக்கிறார். இந்தியில் நடிப்பது குறித்து பிருதிவிராஜ் கூறியதாவது:-

அய்யா படத்தின் கதை மிகவும் பிடித்தது. எனவே நடிக்கிறேன். காமெடி, நடனம் என எல்லா விஷயங்களும் இருக்கும். இதில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் ராணி முகர்ஜியின் தீவிர ரசிகன். அவர் நடித்த படங்களை எல்லாம் பார்த்து இருக்கிறேன். அவருடன் இணைந்து நடிப்பது பெருமையாக உள்ளது. அய்யா படத்தில் ராணி முகர்ஜி மராத்தி பெண்ணாக வருகிறார்.

சச்சின் குண்டல்கர் இயக்குகிறார். அடுத்த மாதம் இப்படம் ரிலீசாக உள்ளது.

0 comments:

Post a Comment

POPULAR POSTS