பில்லா 2 தற்போதைய டாக்..!லாபமா, நஷ்டமா..!
தமிழ் சினிமா ஆர்வலர்களின் தற்போதைய டாக் எதுவென்றால் 'பில்லா 2' லாபம் தருமா அல்லது நஷ்டம் ஏற்படுத்துமா என்பது தான்.
அஜீத் நடிப்பில் வெளியான 'பில்லா 2' படம் முதல் நாள் வரி நீங்கலாக 7.61 கோடி கல்லா கட்டியது.
லாபமா, நஷ்டமா என்று பார்த்தா� ��் படத்தினை வெளியிட்டு இருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு நஷ்டம் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
எப்போதுமே ஒரு படத்தினை தயாரித்தாலோ, விநியோகித்தாலோ லாபமும் எனக்குத் தான், நஷ்டம் வந்தாலும் எனக்குத் தான் என்கிற பாணியில் படங்களை வெளியிடுவது ஆஸ்கர் ரவிச்சந்திரன் வழக்கம்.
'அந்நியன்', 'தசாவதாரம்' போன்ற மெகா பட்ஜெட் படங்களை இவ்வாறு வெளியி ட்டு லாபமும் அடைந்தார். ஆனால் தற்போது பில்லா 2 இவருக்கு 1 முதல் 5 கோடி வரை நஷ்டம் ஏற்படுத்தும் என்கிறது கோலிவுட்.
காரணம், 'பில்லா 2' படத்தின் முதல் நாள் 7.61 கோடி, இரண்டாம் நாள் 5.23 கோடி, மூன்றாம் நாள் 4.92 கோடி என்று சரிவதாலும், படத்தினைப் பற்றி இருவேறு விமர்சனங்கள் உலா வருவதாலும் படம் நஷ்டம் ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறதாம்.
மேலும், படத்தின் வசூல் வரும் வாரங்களில் � �டுமையாக சரியும் என்ற பேச்சு நிலவி வருகிறது.
.
.
0 comments:
Post a Comment